சினிமா
நடிகர் அஜித்தை காப்பி அடிக்கும் பிரபல நடிகை…! அதிர்ச்சியில் ரசிகர்கள்!

நடிகர் அஜித்தை காப்பி அடிக்கும் பிரபல நடிகை…! அதிர்ச்சியில் ரசிகர்கள்!
நடிகை நயன்தாரா தனக்கு வழங்கப்பட்ட ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என்ற பட்டம் தொடர்பில் வெளியிட்ட கருத்து பெரும் விவாதத்திற்கு உள்ளாகியுள்ளது. முன்னதாக, தமிழ் திரை உலகின் முன்னணி நடிகரான அஜித் “தன்னை கடவுளாக யாரும் அழைக்க வேண்டாம்” என்று ரசிகர்களிடம் கேட்டிருந்தார். அவரது இந்த அணுகுமுறை ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. தற்பொழுது இதைப் போலவே நயன்தாரா “தன்னை லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்க வேண்டாம்” என்று தெரிவித்துள்ளார்.இந்த இருவரின் கருத்துக்களில் உள்ள ஒற்றுமை குறித்து ரசிகர்கள் பலரும் பேச ஆரம்பித்துள்ளனர். சிலர், “நயன்தாரா அஜித்தின் வழியில் நடக்கிறார்” எனப் பாராட்டி இருந்தாலும் மற்றொருபுறம், “நயன்தாரா அஜித்தை காப்பி அடிக்கிறார்” என சிலர் விமர்சிக்கின்றனர்.நயன்தாராவின் இந்த அறிவிப்பு, ரசிகர்களிடையே பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. இது ஒரு சாதாரண கருத்தா அல்லது தமிழ் திரையுலகில் நட்சத்திரங்களின் அடையாளங்களை மாற்றும் ஒரு முக்கிய நிலைப்பாடா என ரசிகர்கள் பலரும் கருத்து தெரிவிக்கின்றனர்.