இலங்கை
போக்குவரத்து பொலிஸ் அதிகாரிகளுக்கு வெளியான நற்செய்தி

போக்குவரத்து பொலிஸ் அதிகாரிகளுக்கு வெளியான நற்செய்தி
போக்குவரத்துப் பிரிவுகளில் பணிபுரியும் அதிகாரிகளுக்கு வழங்கப்படும் வெகுமதிகளை அதிகரிக்க இலங்கை பொலிஸ் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
அதன்படி, 01.02.2025 முதல் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தற்போது வழங்கப்படும் வெகுமதித் தொகையை 25% அதிகரிக்குமாறு, பொலிஸ் உயரதிகாரிகளுக்கு சுற்றறிக்கை வெளியிட்டப்பட்டுள்ளது.
இங்கு, களப் பணிகளில் ஈடுபடும் போக்குவரத்துப் பிரிவு அதிகாரிகள், கள மற்றும் அலுவலகப் பணிகளில் ஈடுபடும் ஆய்வாளர் நிலை அதிகாரிகள், பொலிஸ் சார்ஜென்ட்கள் மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள்கள் மற்றும் களப் பணிகளில் ஈடுபடும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஓட்டுநர்கள் ஆகியோருக்கு குறித்த வெகுமதித் தொகை வழங்கப்படவுள்ளது.