உலகம்
வட கரோலினா மாகாணத்தில் காட்டுத் தீ!

வட கரோலினா மாகாணத்தில் காட்டுத் தீ!
அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாகாணத்தில் கடந்த வாரம் ஏற்பட்ட காட்டுத்தீயானது அருகில் உள்ள பகுதிகளுக்கும் பரவியுள்ளதாக அமெரிக்க தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தக் காட்டுத்தீயானது நான்கு வெவ்வேறு காடுகளில் 4000 ஏக்கருக்கும் அதிகமான நிலப்பரப்பை எரித்துள்ளது. தீ அணைப்பு பணியில் 500க்கும் மேற்பட்ட தீயணைப்புப் படையினர் தீவிரமாக செயற்பட்டு வருகின்றனர்.
இதேவேளை பாதுகாப்பு கருதி 2,000 த்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிப்பிடங்களில் இருந்து வெளியேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.