Connect with us

விளையாட்டு

Champions Trophy final: சுழல் ஜாலம், தரமான பீல்டிங்… நியூசிலாந்திடம் இந்தியா ஏன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்?

Published

on

ICC Champions Trophy Why India wary of New Zealand in the final Tamil News

Loading

Champions Trophy final: சுழல் ஜாலம், தரமான பீல்டிங்… நியூசிலாந்திடம் இந்தியா ஏன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்?

9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இறுதிப் போட்டி வருகிற ஞாயிற்றுக்கிழம்மை (மார்ச்-09) துபாயில் அரங்கேற உள்ளது.  இதில் இந்தியா – நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன. ஏற்கனவே கடந்த ஞாயிற்றுக்கிழமை அந்த மைதானத்தில் இந்தியாவுக்கு எதிராக ஆடிய நியூசிலாந்து, துபாய் ஆடுகளத்திற்கு ஏற்ப எப்படி ஆட வேண்டும் என்பதை அவர்கள் அறிந்துள்ளார்கள். இந்நிலையில், நியூசிலாந்து இறுதிப் போட்டியில் வெற்றிபெற வலிமையான அணியாக இருப்பதற்கான காரணங்களை இங்குப் பார்க்கலாம். சுழல் ஜாலம் சம்பியன்ஸ் டிராபியில் சுழற்பந்து வீச்சில் இந்தியாவுக்கு இணையான அல்லது அதனுடன் நெருங்கி வரக்கூடிய அணிகளுள் ஒன்றாக நியூசிலாந்து இருக்கிறது. இடது கை சுழற்பந்து வீச்சாளர் மிட்செல் சான்ட்னர் தலைமையிலான அந்த அணியில், மைக்கேல் பிரேஸ்வெல், க்ளென் பிலிப்ஸ் மற்றும் ரச்சின் ரவீந்திரா ஆகிய மூன்று ஸ்பின்னர் உள்ளனர் . எனவே, சுழற்பந்து வீச்சு என வரும் போது, அவர்கள் வசம் பல வெரைட்டிகளில் பந்துகள் வீச வீரர்கள் இருக்கிறார்கள். ஆங்கிலத்தில் படிக்கவும்: ICC Champions Trophy: Why India should be wary of New Zealand in the finalஆனாலும், லீக் ஆட்டத்தில் அவர்களை இந்திய அணியால் சமாளிக்க முடிந்தது. அதில் வெற்றியும் கண்டனர். அதனால், தோல்வியுற்ற நியூசிலாந்து, துபாய் ஆடுகளத்தில் இந்தியாவுக்கு எப்படியெல்லாம் நெருக்கடி கொடுக்க முடியும் இந்நேரத்தில் அறிந்து வைத்து இருப்பார்கள். பாகிஸ்தானுக்கு எதிரான இந்தியாவின் ஆட்டத்திற்கு பயன்படுத்தப்பட்ட அதே ஆடுகளத்தில் இறுதிப் போட்டி விளையாடப்படுவதால், நியூசிலாந்து சுழற்பந்து வீச்சாளர்களுக்கு பெரிய அளவில் பங்கு இருக்கும்.துல்லியமான வேகம்  நியூசிலாந்துக்கு எதிராக இந்தியாவை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது, அவர்களின் வேகப்பந்து வீச்சாளர்கள் புதிய பந்தை எப்படி சிறப்பாக கையாண்டனர் என்பதுதான். இந்தியா இங்கு விளையாடிய மற்ற மூன்று போட்டிகளிலும் சீம் அசைவு இல்லை. ஆனால், நியூசிலாந்துக்கு எதிராக, அது வேறுவிதமாக இருந்தது. ஏனெனில், அவர்களின் வேகப்பந்து வீச்சாளர்கள் அனைவரும் சற்று உயரமானவர்கள். மேலும் அவர்கள் நல்ல லெந்த்தில் பந்து வீசுவதால், பந்து அதிக நேரம் காற்றில் இருக்கிறது. அப்படி பந்து காற்றில் இருப்பதால், அது அசைவு பெறுதற்கான வாய்ப்புகள் அதிகம். அவர்களின் இயக்கத்துடன் செல்ல, அவர்கள் உருவாக்கும் கூடுதல் பவுன்ஸ், ஐ.சி.சி. போட்டிகளில் அனைத்து வடிவங்களிலும் சமீபத்திய காலங்களில் இந்தியாவின் டாப் ஆர்டரை தொந்தரவு செய்துள்ளது. முதல் பவர்பிளேயில் ரன்கள் முக்கியமானது என்பதால், இதை எதிர்கொள்ள இந்தியா மிகக் கச்சிதமான திட்டத்தை கொண்டு வர வேண்டும்.01தரமான பீல்டிங்கடந்த ஞாயிற்றுக்கிழமை நடத்த ஆட்டத்தில் காட்டியபடி, நியூசிலாந்து களத்தில் 30-40 ரன்களை சேமிக்கும் திறன் கொண்ட அணியாக இருக்கிறது. போதாக்குறைக்கு அவர்கள் பந்தை கேட்ச் எடுக்க அதிகம் முயல்கிறார்கள். பந்து பிட்ச் ஆகும் முன்பே டைவ் அடித்து  கேட்ச் பிடிக்க பாய்கிறார்கள். சான்ட்னர், வில் யங் மற்றும் மைக்கேல் பிரேஸ்வெல் போன்றவர்கள் மற்ற வேறு அணிகளில் ஆடி இருந்தால் அவர்கள் டாப் பீல்டர்களாகக் கருதப்படுவார்கள். இவர்களைத் தவிர, ஜான்டி ரோட்சுக்கே டஃப் கொடுக்கும் ஒரு தரமான பீல்டர் நியூசிலாந்து வசம் இருக்கிறார்.  அவர்தான் கிளென் பிலிப்ஸ். பந்து பேட்டில் பட்டு வெளியேறியதும் புலிப் பாய்ச்சல் போடுகிறார். மேலும் தனது அபாரமான கேட்ச்கள் மற்றும் பீல்டிங்கின் மூலம் ஆட்டத்தின் போக்கை மாற்றியமைக்கிறார். சுழற்பந்து வீச்சாளர்கள் பந்துகளை போடும் போது, அவர்களின் சிறந்த பீல்டர்கள் அனைவரும் 30 யார்டு வட்டத்துக்குள் இருக்கிறார்கள். இது எதிரணியின் பேட்ஸ்மேன்கள் சிங்கள் ரன் எடுப்பதை தடுத்து அவர்கள் மீது ஒருவித அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. பந்து எட்ஜ் ஆகி வெளியேறினால், அவர்கள் கண்ணை மூடிக்கொண்டு பந்தைப் பிடிக்க டைவ் அடிக்கிறார்கள். சிக்கினால் கேட்ச், தடுத்து விட்டால் ஒரு ரன் மட்டுமே எடுக்க முடிகிறது. எனவே, நியூசிலாந்துக்கு எதிராக ஒவ்வொரு ரன்னையும் எப்படி எடுக்க வேண்டும் என்பது இந்தியாவுக்குத் தெரியும். அதுவே அவர்களுக்கு கூடுதல் அழுத்தத்தை அதிகரிக்கிறது.02பேட்டிங் ஆழம்இந்தியாவைப் போலவே, நியூசிலாந்ந்து அணியும் ஆடுகளத்தின் நிலைமைகளுக்கு ஏற்ற பேட்டிங் வரிசையைக் கொண்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை அவர்கள் இந்தியாவுக்கு எதிராக 250 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்தும்போது, அதனை அவர்களால் செயல்படுத்த முடியவில்லை. ஆனாலும், அவர்கள் சிறப்பான பேட்டிங் வரிசையைக் கொண்டுள்ளனர். முதல் மூன்று வீரர்களாக களமாடும் ரச்சின், வில் யங் மற்றும் கேன் வில்லியம்சன் ஆகியோரால் அணிக்கு அதிரடியான தொடக்கம் கொடுக்க முடியும். அதேநேரத்தில், மிடில் ஆடர் வீரர்கள் போல், அவர்களால் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியும். பெரும்பாலான அணிகள் இந்தியாவின் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக போராடியிருந்தாலும், ட்வீக்கர்களுக்கு எதிராக சிறந்து விளங்கும் டாம் லாதம், டேரில் மிட்செல் மற்றும் பிலிப்ஸ் போன்றவர்களால் நியூசிலாந்து அணியால் அந்த போக்கை மாற்ற முடியும். அந்த ஆட்டத்தில்  வருண் சக்கரவர்த்திக்கு எதிராக மட்டுமே அவர்கள் சொதப்பி இருந்தார்கள். ஆனால் வருகிற ஞாயிற்றுக்கிழமை அதற்கும் அவர்கள் தயாராகிவிடுவார்கள்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன