சினிமா
சென்னையில் சொகுசு அப்பார்ட்மெண்ட் வாங்கிய மணிமேகலை.. அதுவும் இத்தனை கோடியா

சென்னையில் சொகுசு அப்பார்ட்மெண்ட் வாங்கிய மணிமேகலை.. அதுவும் இத்தனை கோடியா
தமிழ் சின்னத்திரையில் ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்படும் தொகுப்பாளினிகளில் ஒருவர் மணிமேகலை.விஜய் டிவியில் குக் வித் கோமாளி ஷோவில் முக்கிய பிரபலமாக வலம் வந்த மணிமேகலை அந்த ஷோவில் VJ பிரியங்கா உடன் ஏற்பட்ட சண்டை காரணமாக அந்த சேனலை விட்டே வெளியேறிவிட்டார்.தற்போது ஜீ தமிழ் சேனலில் பணியாற்றும் அவர் அங்கு டான்ஸ் ஜோடி டான்ஸ் சீசன் 3 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.இந்நிலையில் மணிமேகலை தற்போது சென்னையில் மிகப்பெரிய தொகை கொடுத்து ஒரு சொகுசு அபார்ட்மெண்ட் வாங்கி இருக்கிறார். இதன் விலை மட்டுமே ரூ. 1 கோடியில் இருந்து ரூ. 1.50 கோடி இருக்கும் என கூறப்படுகிறது.அதற்கான சாவி வாங்கிய புகைப்படங்களை அவர் வெளியிட்டு இருக்கிறார். விரைவில் அந்த வீட்டில் home tour வீடியோ வெளியிடப்போவதாகவும் அவர் கூறியுள்ளார். தற்போது இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.