Connect with us

உலகம்

அமெரிக்காவுக்கு சீனா எச்சரிக்கை!

Published

on

Loading

அமெரிக்காவுக்கு சீனா எச்சரிக்கை!

வரி விதிப்பால் அமெரிக்கா எதைச் சாதித்துவிட்டது என்று சீனாவின் வெளியுறவு அமைச்சர் வாங் யீ கேள்வி எழுப்பியுள்ளார்.

சீனாவில் தற்போது நாடாளுமன்றக் கூட்டம் நடைபெற்று வருகிறது. அதில் பல்வேறு அதிகாரிகள் கலந்து பேசி வருகின்றனர். அந்நிகழ்வில் பங்கேற்றபோது செய்தியாளர்களிடம் வாங் யீ அமெரிக்கா குறித்து கருத்து தெரிவித்தார்.

Advertisement

சீனாவும் அமெரிக்காவும் இணைந்து செயல்பட அனைத்து வாய்ப்புகள் உள்ளதாகவும் ஒருவருக்கு ஒருவர் துணையாக நிற்க முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.

“சீனாவை அடக்கி ஆளவும் அதே நேரம் அதனுடன் நட்பு பாராட்டவும் எந்த நாடாலும் முடியாது. இரண்டு கொள்கையுடன் செயல்பட்டால் உறவு நிலைக்காது,” என்று வாங் யீ எச்சரித்தார்.

சீனாமீது டிரம்ப் நிர்வாகம் வரிவிதிப்பை அதிகரித்தது. அதற்குப் பதிலடி தரும் விதமாக பெய்ஜிங்கும் வா‌ஷிங்டன்மீது வரிவிதிப்பைக் கூட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன