இலங்கை
டிஜிட்டல் பொருளாதாரம் கிராமங்கள் நோக்கியும் விஸ்தரிக்கப்பட வேண்டும் ; ஸ்ரீநேசன் சுட்டிக்காட்டு

டிஜிட்டல் பொருளாதாரம் கிராமங்கள் நோக்கியும் விஸ்தரிக்கப்பட வேண்டும் ; ஸ்ரீநேசன் சுட்டிக்காட்டு
டிஜிட்டல் பொருளாதாரம் நகரப் பகுதிகளுடன் மட்டுப்படுத்தப்படாமல் கிராமங்கள் நோக்கியும் விஸ்தரிக்கப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் வலியுறுத்தியுள்ளார்.
டிஜிட்டல் பொருளாதார அமைச்சு மற்றும் விஞ்ஞான, தொழில்நுட்ப அமைச்சு ஆகியன தொடர்பான குழு நிலை விவாதம் இன்று இடம்பெற்றது.
இதில் கலந்துகொண்டு கருத்துரைத்த நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன், அதிகளவான மக்கள் கிராமப் புறங்களிலேயே வாழ்வதாக சுட்டிக்காட்டினார்.