இலங்கை
பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள சம்மாந்துறை மருத்துவமனை மருத்துவர்கள்!

பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள சம்மாந்துறை மருத்துவமனை மருத்துவர்கள்!
அநுராதபுரம் மருத்துவமனையின் மருத்துவர்களுக்கான விடுதியில் 32 வயதான பெண் மருத்துவர் ஒருவர் கத்தி முனையில் தவறான நடத்தைக்கு உள்ளாக்கப்பட்டிருந்ததைக் கண்டித்தும், குறித்த நபரை கைது செய்யுமாறும் கோரியும் இன்று புதன்கிழமை(12) மருத்துவர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
அதன்படி, சம்மாந்துறை ஆதார மருத்துவமனையில் கடமையாற்றி வருகின்ற மருத்துவர்களும் இன்று காலை முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.
இதனால் வெளி நோயாளர்கள் பெரிதும் அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.