Connect with us

உலகம்

லக்சம்பர்க் இளவரசர் உயிரிழப்பு!

Published

on

Loading

லக்சம்பர்க் இளவரசர் உயிரிழப்பு!

லக்சம்பர்க் இளவரசர் ஃபிரெட்ரிக் உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்தார். அவருக்கு அரிய வகை மரபியல் நோய் பாதிப்பு ஏற்பட்டதால் உயிரிழந்தார் என்று அவரது தந்தை இளவரசர் ராபர்ட் தெரிவித்தார். ஐரோப்பாவில் உள்ள குட்டி நாடு லக்சம்பர்க். இது உலகின் பணக்கார நாடுகளில் ஒன்றாகும்.

இது குறித்து இளவரசர் ராபர்ட் வெளியிட்டுள்ள பதிவில், “எங்கள் மகன், POLG அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் கிரியேடிவ் இயக்குநர், ஃபிரடெரிக் உயிரிழந்ததை நானும் என் மனைவியும் மிகவும் கனத்த இதயத்துடன் உங்களுக்குத் தெரிவிக்கிறோம்,” என்று குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

22 வயதான இளவரசர் ஃபிரடெரிக் பாரிசில் கடந்த மார்ச் 1 ஆம் திகதி உயிரிழந்தார். இவர் கடந்த 2022 ஆம் ஆண்டு அரிய வகை நோய்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்யும் நோக்கில் POLG அறக்கட்டளையை உருவாக்கினார்.

அவருக்கு ஏற்பட்ட மரபியல் நோய் காரணமாக மூளை, நரம்புகள், தசைகள் மற்றும் கல்லீரல், கண்கள் ஆகியவற்றின் செயல்பாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இந்த பாதிப்புக்கு இதுவரை முறையான சிகிச்சை இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன