Connect with us

சினிமா

கடமைக்குனு நடிச்ச அஜித்.. ப்ளாப் ஆனதற்கான காரணத்தை கூறிய இயக்குனர்

Published

on

Loading

கடமைக்குனு நடிச்ச அஜித்.. ப்ளாப் ஆனதற்கான காரணத்தை கூறிய இயக்குனர்

சினிமாவை விட்டு போக முன்பே முடிவு எடுத்தார். ஆனால் ரசிகர்களுக்காக தான் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார்‌. ஒருபுறம் ரேசில் பிஸியாக இருந்தாலும் குட் பேட் அக்லி படத்தில் நடித்து வருகிறார். மேலும் அஜித்தின் நடிப்பில் கடைசியாக விடாமுயற்சி படம் வெளியானது.

இந்த படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை தான் பெற்றது. இந்நிலையில் அஜித் பட இயக்குனர் ஒருவர் தன்னுடைய பட பிளாப்புக்கான காரணத்தை பேட்டி கொடுத்திருக்கிறார். இயக்குனர் பல வெற்றி படங்களை கொடுத்திருக்கிறார்.

Advertisement

மேலும் அவரது தோல்வி படங்களில் முக்கியமான ஒன்று அஜித் நடித்த ஜி. இந்த படம் குறித்து பேசி லிங்கசாமி அந்த நேரத்தில் அஜித் சார் ரேசில் பிஸியாக இருந்தார். அந்த சமயத்தில் கதையை சொல்லும்போது பிடிக்கவில்லை என்று சொல்லிவிட்டார்.

ஆனால் தயாரிப்பாளர் சக்கரவர்த்தி ஏதாவது சொல்லி அஜித்தை நடிக்க வைங்க என்று சொல்லிவிட்டாராம். அதனால் நானும் ஏதேதோ கதை சொல்லி அஜித்திடம் சம்மதம் வாங்கி விட்டேன். மேலும் படத்துல உண்மையாவே தாடி வளர்க்கணும், உடம்பை குறைக்கணும், ஒரு காலேஜ் பையன் போல இருக்கணும் என்று சொன்னேன்.

இதில் அஜித்துக்கு உடன்பாடு இல்லாததால் ஒட்டு தாடி வைத்து கடமைக்கு அடித்தார். அப்போது படம் எடுக்கும்போதே நான் நெனச்சது எதுவுமே சரியா வரல, இந்தப் படம் ஓடுறது கஷ்டம் என்று தெரிந்தது. அதேபோல் ஒரு நிலநடுக்கம் வந்தது போல தான் ஜி படம் இருந்தது.

Advertisement

வந்ததும் தெரியாமல் காணாமல் போய்விட்டது என்று லிங்குசாமி கூறியிருக்கிறார். மேலும் இதற்கு காரணம் அஜித்தை மட்டும் குறை சொல்ல முடியாது, வேண்டாம் வெறுப்பாக நடிக்க கதை பிடிக்காமலும், தயாரிப்பாளர் வற்புறுத்தலாலும் ஜி படத்திற்கு சம்மதித்துள்ளார்.

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன