சினிமா
சிம்புவின் 49 ஷூட்டிங் தள்ளிப்போகின்றதா..? நடிகர் எடுத்த திடீர் முடிவு!

சிம்புவின் 49 ஷூட்டிங் தள்ளிப்போகின்றதா..? நடிகர் எடுத்த திடீர் முடிவு!
தமிழ் சினிமாவில் மாநாடு, வெந்து தணிந்தது காடு போன்ற படங்களின் மூலம் மாஸ் ஹீரோவாக திகழ்ந்த சிம்பு தனது 49வது படத்திற்காக பல கதைகளை கேட்டிருந்தார். இந்த நிலையில், இயக்குநர் ராம் குமார் பாலகிருஷ்ணன் அவரை இயக்கவுள்ளதாக தகவல்கள் சமூக ஊடகங்களில் வந்துள்ளன.அத்துடன், இப்படத்தை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகவும் ஏப்ரல் மாதத்திலிருந்து படப்பிடிப்பு தொடங்கப் போவதாகவும் கூறியிருந்தது. இந்நிலையில், தற்போது சிம்பு இப்படத்தை ஏப்ரல் மாதத்தில் தொடங்குவதற்கு மறுத்துவிட்டார் என புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.சிம்பு தனது 49வது படத்துக்கான வேலைகளைத் தொடங்கியுள்ளார் என்பது உறுதியாக கூறப்பட்டிருந்தது. அத்துடன் சிம்பு சிறப்பான கதைகளையே தேர்வு செய்து ஒப்புக்கொள்ளும் நடிகர். அவருடைய முடிவுகள் எப்போதும் வியப்பை ஏற்படுத்தக் கூடியவை அந்தவகையில் இவரின் இந்த முடிவு எதற்காக இருக்கலாம் என ரசிகர்கள் பல கேள்விகளை எழுப்பிவருகின்றனர்.STR ஒரு பெரிய நடிகராக வளர்ந்து வருவதால், அவருடைய ஒவ்வொரு முடிவும் ரசிகர்களை ஆவலாக்கும் வகையில் காணப்படும். அத்துடன் STR ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் படத்தை எப்போது தொடங்குவார்கள் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக உற்சாகமாகக் காத்திருக்கின்றார்கள்.