Connect with us

விளையாட்டு

வீடியோ: வெஸ்ட் இண்டீஸ் வீரருடன் யுவராஜ் வார்த்தைப் போர்… சமாதானம் செய்து வைத்த பிரையன் லாரா!

Published

on

Yuvraj Singh and Tino Best clash heated exchange IML T20 final Brian Lara separates duo video Tamil News

Loading

வீடியோ: வெஸ்ட் இண்டீஸ் வீரருடன் யுவராஜ் வார்த்தைப் போர்… சமாதானம் செய்து வைத்த பிரையன் லாரா!

முதலாவது சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்றது. 6 அணிகள் கலந்து கொண்ட இந்த தொடரில் லீக் மற்றும் அரையிறுதி ஆட்டங்களின் முடிவில் இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறின. இந்நிலையில், இவ்விரு அணிகள் மோதிய இறுதிப் போட்டி ராய்ப்பூரில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதது. அந்த அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 148 ரன்கள் எடுத்தது. வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் அதிகபட்சமாக லெண்டில் சிம்மன்ஸ் 57 ரன்கள் எடுத்தார். இந்தியா தரப்பில் வினய் குமார் 3 விக்கெட்டுகளும், ஷபாஸ் நதீம் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். இதனையடுத்து, 149 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை இந்தியா துரத்தியது. அதிரடியாக இந்திய வீரர்கள் அணியின் வெற்றியை உறுதி செய்தனர். இந்திய அணி 17.1 ஓவரில் 4 விக்கெட்டை மட்டும் இழந்து 149 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, சாம்பியன் பட்டத்தை வென்றது. இந்தியா தரப்பில் சிறப்பாக ஆடிய அம்பத்தி ராயுடு 74 ரன்கள் எடுத்தார்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன