விளையாட்டு
வீடியோ: வெஸ்ட் இண்டீஸ் வீரருடன் யுவராஜ் வார்த்தைப் போர்… சமாதானம் செய்து வைத்த பிரையன் லாரா!
வீடியோ: வெஸ்ட் இண்டீஸ் வீரருடன் யுவராஜ் வார்த்தைப் போர்… சமாதானம் செய்து வைத்த பிரையன் லாரா!
முதலாவது சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்றது. 6 அணிகள் கலந்து கொண்ட இந்த தொடரில் லீக் மற்றும் அரையிறுதி ஆட்டங்களின் முடிவில் இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறின. இந்நிலையில், இவ்விரு அணிகள் மோதிய இறுதிப் போட்டி ராய்ப்பூரில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதது. அந்த அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 148 ரன்கள் எடுத்தது. வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் அதிகபட்சமாக லெண்டில் சிம்மன்ஸ் 57 ரன்கள் எடுத்தார். இந்தியா தரப்பில் வினய் குமார் 3 விக்கெட்டுகளும், ஷபாஸ் நதீம் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். இதனையடுத்து, 149 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை இந்தியா துரத்தியது. அதிரடியாக இந்திய வீரர்கள் அணியின் வெற்றியை உறுதி செய்தனர். இந்திய அணி 17.1 ஓவரில் 4 விக்கெட்டை மட்டும் இழந்து 149 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, சாம்பியன் பட்டத்தை வென்றது. இந்தியா தரப்பில் சிறப்பாக ஆடிய அம்பத்தி ராயுடு 74 ரன்கள் எடுத்தார்.