சினிமா
கங்குவா படத்தின் நஷ்டம்.. தயாரிப்பாளர் தலையில் துண்டு! சூர்யா எடுத்த முடிவு

கங்குவா படத்தின் நஷ்டம்.. தயாரிப்பாளர் தலையில் துண்டு! சூர்யா எடுத்த முடிவு
கடந்த ஆண்டு பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படம் கங்குவா. சூர்யா – சிறுத்தை சிவா கூட்டணியில் உருவான இப்படத்தை ஸ்டுடியோ க்ரீன் ஞானவேல் ராஜா தயாரித்து இருந்தார்.பல கோடி செலவு செய்து பிரம்மாண்ட பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் நஷ்டத்தை சந்தித்து. ஆம், படத்திற்கு வந்த கடுமையான விமர்சனங்கள் வசூலை பாதித்தது. இதன்மூலம் எதிர்பார்த்த வசூலும் கிடைக்கவில்லை.இந்த நிலையில், கங்குவா படத்தை தயாரித்து பெரிய அளவில் நஷ்டத்தை சந்தித்து இருக்கும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்காக அடுத்து இரண்டு படங்கள் நடித்து கொடுக்க சூர்யா முடிவு செய்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.சூர்யாவின் நடிப்பில் அடுத்ததாக ரெட்ரோ வெளிவரவுள்ளது. இதை தொடர்ந்து சூர்யா 45 மற்றும் வாடிவாசல் ஆகிய படங்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.