Connect with us

பொழுதுபோக்கு

இங்க நான் தான் மியூசிக் டைரக்டர்: உங்க இஷ்டத்துக்கு பாட கூடாது: டி.எம்.எஸ். மீது கோபப்பட்ட இளையராஜா!

Published

on

Ilayaraja TS

Loading

இங்க நான் தான் மியூசிக் டைரக்டர்: உங்க இஷ்டத்துக்கு பாட கூடாது: டி.எம்.எஸ். மீது கோபப்பட்ட இளையராஜா!

க்ளாசிக் தமிழ் சினிமாவில், முன்னணி பாடகராக பல ஹிட் பாடல்களை பாடியுள்ள டி.எம்.சௌந்திரராஜன், இளையராஜாவின் இசையில் ஒரு சில படங்களில் பாடியிருந்தாலும் ஒரு கட்டத்திற்கு மேல், இருவரும் இணைந்து பாடல்கள் கொடுக்கவில்லை. இதற்கு பல காரணங்கள் சொல்லப்பட்டாலும் இது குறித்து டி.எம்.எஸ். மகள் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்,தமிழ் சினிமாவில் தனது குரல் வளத்தின் மூலம் பல ஹிட் பாடல்களை கொடுத்தவர் டி.எம்.சௌந்திரராஜன். எம்.ஜி.ஆர் சிவாஜி உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் முதல் பலருக்கும் தனது தனித்திறமையின் மூலம் திரையில் அவர்கள் பாடுவது போலவே பாடி அசத்திய இவர், எந்த நடிகருக்காக பாடினாலும் திரையில், அந்த நடிகரே பாடும் அளவுக்கு அவர்களின் குரல் போன்ற தோற்த்தில் பாடும் திறன் பெற்றவர்.அதேபோல் சினிமாவில் ஒரு சில படங்களில் நடித்துள்ளார் டி.எம்.சௌந்திரராஜன்.க்ளாசிக் இசையமைப்பாளர் கே.வி.மகாதேவன் தொடங்கி, எம்.எஸ்.வி உள்ளிட்ட முன்னணி இசையமைப்பாளர்கள் பலருடன் இணைந்து பல ஹிட் பாடல்களை கொடுத்துள்ள, டி.எம்.எஸ்., இளையராஜாவின் முதல் படமாக அன்னக்கிளி படத்தில், அதனைத் தொடர்ந்து சிவாஜி, ரஜினிகாந்த் ஆகியோரின் படங்களுக்கு இளையராஜா இசையமைத்தபோது, அவர்களுக்காக பாடல்கள் பாடியுள்ளார். ஒரு கட்டத்தில், டி.எம்.எஸ்-க்கு வாய்ப்பு கொடுக்காத இளையராஜா, மற்ற பாடகர்களுக்கு வாய்ப்பு கொடுத்திருந்தார்.இது குறித்து ஒரு பேட்டியில் பேசியுள்ள டி.எம்.சௌந்திரராஜன், இளையராஜா இசையில் சிவாஜி படங்களுக்கு பாடியிருக்கிறேன். அன்னக்கிளி படத்தில் அன்னக்கிளியே உன்னை தேடுதே என்ற பாடலை பாடி கொடி ஏற்றி வைத்தேன். அதன்பிறகு சிவாஜிக்கு ‘’நல்லவர்கெல்லாம் சாட்சிகள் இங்கே’’, ரஜினிகாந்துக்காக ‘’நண்டு ஊறுது நரி ஊறுது’’ உள்ளிட்ட பாடல்களை பாடியிருந்தேன். இளையராஜா இசையில் அருமையான பாடல்களை பாடியிருக்கிறேன்.இப்போது அவர் இசையில் பாடாததற்கு காரணம், நான் குறையாக சொல்லவில்லை. நான் ஒருவருக்கு உதவி செய்கிறேன் என்றால், என்னை பற்றி மற்றவர்கள் பேசினால் தான் நான் உதவி செய்ததற்கான அர்த்தம் இருக்கும். இளையராஜா டி.எம்.செளந்திரராஜனை பாட வைத்தார். ஏகப்பட்ட பாடல்கள் ஹிட் ஆனது. ஆனாலும், இளையராஜா டி.எம்.சௌந்திரராஜனை எவ்வளவு அழகாக பாட வைத்துவிட்டார் என்று யாரும் சொல்லவில்லை. மாறாக இளையராஜா இசையில் டி.எம்.எஸ் எவ்வளவு அழகாக பாடிவிட்டார் பாருங்கள் என்று சொல்லிவிட்டார்கள். இதுதான் அவர் மனதில் இருந்தது.என்னதான் நான் பாட்டு சொல்லிக்கொடுத்திருந்தாலும்’, இந்த குரலைத்தானே பாராட்டுகிறார்கள் குரலே இல்லாமல் பாட வைக்க வேண்டும் என்று முடிவு செய்துவிட்டார் இளையராஜா என்று டி.எம்.எஸ். ஒரு பேட்டியில் கூறியுள்ளார். இதனிடையே, இளையராஜா டி.எம்.எஸ். மோதல் குறித்து பேசியுள்ள டி.எம்.எஸ். மகள், எம்.எஸ்.வியிடம் சொல்வது போல், இந்த பாடலை இப்படி பண்ணலாம்பா என்று இளையராஜாவிடம் அப்பா கூறியுள்ளார்.இதை கேட்ட அவர், இங்கு நான் தான் மியூசிக் டைரக்டர். நான் சொல்வது போலத்தால் நீங்கள் பாட வேண்டும். அங்கு அப்படி பாடினேன் இங்கு இப்படி பாடினேன் என்று சொல்வதை எல்லாம் நான் ஒப்புக்கொள்ள மாட்டேன். நான் சொல்வது போலத்தான் நீங்கள் பாட வேண்டும் என்று சொல்ல, அப்படியாப்பா சரிப்பா என்று கூறியுள்ளார். அதன்பிறகு அப்பா பாடவே இல்லை. அவரும் அதன்பிறகு கூப்பிடவே இல்லை. அதன்பிறகு இருவரும் சந்திக்கும்போது ஆஹா ஓஹோ என்று பேசுவார். ஆனால் உள்ளே என்ன இருக்கிறது என்று தெரியாது என்று கூறியுள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன