Connect with us

இந்தியா

ஹமாஸுக்கு ஆதரவு பிரச்சாரம்: அமெரிக்காவின் ஜார்ஜ்டவுன் பல்கலை.யில் இந்திய மாணவர் கைது

Published

on

a

Loading

ஹமாஸுக்கு ஆதரவு பிரச்சாரம்: அமெரிக்காவின் ஜார்ஜ்டவுன் பல்கலை.யில் இந்திய மாணவர் கைது

ஹமாஸுடன் தொடர்பு வைத்திருந்ததாகவும், சமூக ஊடகங்களில் அதன் பிரச்சாரத்தைப் பரப்பியதாகவும் கூறி, வாஷிங்டனின் ஜார்ஜ்டவுன் பல்கலைக் கழகத்தில் படிக்கும் இந்திய மாணவர் பதர் கான் சூரியை அமெரிக்க அதிபர் டிரம்பின் நிர்வாகம் கைது செய்துள்ளது.பாலஸ்தீன ஆதரவு போராட்டங்கள்: அமெரிக்க வெளியுறவுக்கொள்கை குறித்த கவலைகளை காரணம் காட்டி ஜார்ஜ்டவுன் பல்கலைக்கழகத்தில் இந்திய மாணவர் பதர் கான் சூரியை டிரம்ப் நிர்வாகம் கைது செய்து அவரை நாடு கடத்த முயல்கிறது. ஜார்ஜ்டவுன் வெளியுறவு சேவைப் பள்ளியில் உள்ள முஸ்லிம்-கிறிஸ்தவ மையத்தில் முதுகலை பட்டதாரியான பதர்கான், ஹமாஸ் ஆதரவு பிரசாரத்தையும் யூத எதிர்ப்புக் கொள்கையையும் சமூக ஊடகங்களில் பரப்புவதாக அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறையால் குற்றஞ்சாட்டப்பட்டு உள்ளது.ஃபாக்ஸ் நியூஸுக்கு அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறையால் வெளியிட்ட அறிக்கையின்படி, அமெரிக்காவால் பயங்கரவாத அமைப்பாக அறிவிக்கப்பட்ட பாலஸ்தீன போராளிக் குழுவான ஹமாஸுடன் சூரிக்கு தொடர்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இருப்பினும், இதற்கான எந்த நேரடி ஆதாரமும் அறிக்கையில் மேற்கோள் காட்டப்படவில்லை. பதர்கான் சூரியின் நடவடிக்கை அவரை “நாடுகடத்தப்படக்கூடியதாக” மாற்றியதாக வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ முடிவு எடுத்ததாகவும் கூறப்பட்டுள்ளது.வெள்ளை மாளிகையின் துணைத் தலைவர் ஸ்டீபன் மில்லர் மீண்டும் வெளியிட்ட இந்த அறிக்கையில், இந்திய மாணவர் மீதான குற்றச்சாட்டுகளுக்கு எந்த ஆதாரமும் இல்லை. சூரியின் நடவடிக்கைகள் அவரை “நாடுகடத்த” வகை செய்ததாக வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ தீர்மானித்ததாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. ஜார்ஜ்டவுன் பல்கலைக்கழக மாணவர் சமூக ஊடகங்களில் “யூத விரோதத்தை” பரப்பியதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.மாணவர் விசா வைத்திருக்கும் பதர்கான் சூரி, இந்த வார தொடக்கத்தில் வர்ஜீனியாவின் ரோஸ்லினில் உள்ள அவரது வீட்டிற்கு வெளியே கைது செய்யப்பட்டார். அவர் தற்போது லூசியானாவின் அலெக்ஸாண்ட்ரியாவில் வைக்கப்பட்டுள்ளார். மேலும், குடியேற்ற நீதிமன்றத்தில் ஆஜராவதற்காக காத்திருக்கிறார் என்று அவரது வழக்கறிஞரிடம் பேசிய செய்தி நிறுவனமான ராய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.பதர்கான் சூரி 2020-ம் ஆண்டு ஜாமியா மில்லியா இஸ்லாமியாவின் நெல்சன் மண்டேலா அமைதி மற்றும் மோதல் தீர்வு மையத்தில் அமைதி மற்றும் மோதல் ஆய்வுகளில் முனைவர் பட்டம் பெற்றார் .அக்டோபர் 2023 ஹமாஸ் தாக்குதலுக்கு இஸ்ரேலின் ராணுவ பதிலடியை தொடர்ந்து, பாலஸ்தீன ஆதரவு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்ட வெளிநாட்டினரை நாடு கடத்த டிரம்ப் நிர்வாகம் மேற்கொண்ட  முயற்சிகளுக்கு மத்தியில் இந்த கைது நடந்துள்ளது. பதர்கான் சூரியின் வழக்கறிஞர் குற்றச்சாட்டுகளை மறுத்து, “மோதல் தீர்வுக்கு கவனம் செலுத்தும் ஒரு திறமையான அறிஞரை அரசாங்கம் வெளியுறவுக் கொள்கைக்கு மோசமானவர் என்று முடிவு செய்தால், ஒருவேளை பிரச்சினை அரசாங்கத்திடம்தான் இருக்கலாம், அறிஞரிடம் அல்ல” என்று கூறினார்.செமஸ்டரில் ஜார்ஜ்டவுன் பல்கலைக்கழகத்தில் “தெற்காசியாவில் பெரும்பான்மை மற்றும் சிறுபான்மை உரிமைகள்” என்ற பாடத்தை சூரி கற்பிக்கிறார். அவர் ஒரு இந்திய பல்கலைக்கழகத்தில் அமைதி மற்றும் மோதல் ஆய்வுகளில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார். மேலும் அவரது ஆராய்ச்சி மோதல் தீர்வு தொடர்பான பிரச்சினைகளில் கவனம் செலுத்துகிறது.சூரியின் கைது காரணம் குறித்து தெரிவிக்கப்படவில்லை என்றும், அவரது தரப்பில் எந்த சட்டவிரோத நடவடிக்கைகளும் இருப்பதாகத் தெரியாது என்றும் ஜார்ஜ்டவுன் பல்கலைக்கழகத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார். சூரியின் மனைவி, காசாவைச் சேர்ந்த அமெரிக்க குடிமகனான மாபேஸ் சலே கைது செய்யப்படவில்லை.ஜார்ஜ்டவுனின் வலைத்தளத்தின்படி, சலே, அல் ஜசீரா மற்றும் பிற பாலஸ்தீன ஊடகங்களுக்கு பங்களித்துள்ளார் மற்றும் காசாவின் வெளியுறவு அமைச்சகத்துடன் பணியாற்றியுள்ளார். இந்த மாத தொடக்கத்தில், டிரம்ப் நிர்வாகம், கொலம்பியா பல்கலைக் கழக மாணவர் மஹ்மூத் கலீலை பாலஸ்தீன ஆதரவு போராட்டங்களில் ஈடுபட்டதற்காக கைது செய்து நாடு கடத்த முயன்றது. சூரியைப் போலவே, கலீலும் ஹமாஸை ஆதரிப்பதாக நிர்வாகத்தால் குற்றம் சாட்டப்படுகிறார், இருப்பினும் அவரது சட்டக் குழு அத்தகைய தொடர்புகளை மறுத்துள்ளது. கலீல் தற்போது நீதிமன்றத்தில் தனது காவலை எதிர்த்துப் போராடி வருகிறார்.கொலம்பியா பல்கலைக்கழகத்தில் இந்தியப் பெண் ரஞ்சனி சீனிவாசனின் மாணவர் விசாவை அமெரிக்க வெளியுறவுத்துறை ரத்து செய்ததால் நாட்டை விட்டு வெளியேற வேண்டியிருந்தது. உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை (DHS) ஒரு அறிக்கையில், சீனிவாசனை “பயங்கரவாத ஆதரவாளர்” என்று வகைப்படுத்தியது மற்றும் ஹமாஸுக்கு ஆதரவாக வன்முறையை ஆதரிப்பதாக அவர் குற்றம் சாட்டியது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன