சினிமா
இரு ஹீரோயினி இல்லாமல் நடிக்கமாட்டேன்..! பிரபல நடிகர் அதிரடிக் கருத்து!

இரு ஹீரோயினி இல்லாமல் நடிக்கமாட்டேன்..! பிரபல நடிகர் அதிரடிக் கருத்து!
தமிழ் சினிமாவில் தற்பொழுது மக்கள் மத்தியில் அதிகமாக பேசப்படும் நடிகர் என்றாலே அது பிரதீப் ரங்கநாதன் தான். ‘லவ் டுடே’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அவருக்கு அதிகளவு ரசிகர் பட்டாளங்கள் உருவானதுடன் தயாரிப்பாளர்களின் கவனமும் பிரதீப்பின் மேல் ஏற்பட்டுக்கொண்டது.இயக்குநராகப் பணியாற்றிய பிரதீப் தற்போது நடிகராக மாறி அதிகளவு வெற்றியைக் குவிக்கும் இளம் புயலாக தமிழ் சினிமாவில் காணப்படுகின்றார். இந்நிலையில், அவரைச் சுற்றி பெரிய அளவில் புதிய பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன.அந்தவகையில் தற்பொழுது நேர்காணல் ஒன்றில் “இனி நான் ரெண்டு ஹீரோயினி இல்லாமே நடிக்க மாட்டேன்!” என்று பிரதீப் ரங்கநாதன் கூறியுள்ளார். இத்தகவல் தற்பொழுது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றது.பிரதீப் ரங்கநாதனின் அடுத்த படத்தை, கிராமத்துக் கதை அமைப்பில் உருவாக்குவதற்கு இயக்குநர் கீர்த்தீஸ்வரன் முடிவெடுத்துள்ளார். இதுவரை வெளியான தகவல்களின் படி, இப்படம் காதல், நகைச்சுவை மற்றும் கலகலப்பான ரொமான்ஸ் என்பன கலந்து காணப்படும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் இப்படத்தில் மமிதா பைஜூ மற்றும் ஐஸ்வர்யா சர்மா ஆகியோர் நடிக்கவுள்ளதாகவும் கூறியுள்ளனர். இதன் மூலம் பிரதீப் மீண்டும் திரையுலகில் கலக்கவுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.