Connect with us

இந்தியா

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து: 16-வது முறையாக தீர்மானம் நிறைவேற்றம்

Published

on

Puducherry Assembly passes resolution demanding Statehood for 16th time Tamil News

Loading

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து: 16-வது முறையாக தீர்மானம் நிறைவேற்றம்

புதுச்சேரிக்கு மத்திய அரசு மாநில அந்தஸ்து வழங்க வலியுறுத்தி, புதுச்சேரி சட்டப்பேரவையில் 16-வது முறையாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டதுபுதுச்சேரி சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரின் இறுதி நாளான இன்றுவியாழக்கிழமை தி.மு.க, காங்கிரஸ் மற்றும் சுயேட்சை சட்டமன்ற உறுப்பினர்கள் புதுச்சேரிக்கு மத்திய அரசு மாநில அந்தஸ்து வழங்க வலியுறுத்தி தனி நபர் தீர்மானங்கள் கொண்டுவந்தனர். தொடர்ந்து, புதுச்சேரிக்கு தனி மாநில அந்தஸ்து பெற வேண்டும் என்பது தான் ஒட்டுமொத்த மாநில மக்களின் எண்ணம் என்றும், எனவே தனிநபர் தீர்மானமாக இல்லாமல் அரசின் தீர்மானமாக மத்திய அரசுக்கு அனுப்ப முதலமைச்சர் ராங்கசாமி வலியுறுத்தினார். இதனையடுத்து, தி.மு.க கொண்டுவந்த தனி நபர் தீர்மானங்கள் அரசு தீர்மானமாக நிறைவேற்றப்படுவதாக சபாநாயகர் செல்வம் அறிவித்தார். புதுச்சேரி சட்டப்பேரவையில் மத்திய அரசு புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க வலியுறுத்தி தற்போது 16-வது முறையாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து, பட்ஜெட் கூட்டத்தொடர் முடிந்த நிலையில், பேரவையை காலவரையின்றி சபாநாயகர் செல்வம் ஒத்திவைத்தார்.செய்தி: பாபு  ராஜேந்திரன் – புதுச்சேரி. 

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன