Connect with us

இலங்கை

பொலிஸார் நடத்திய தாக்குதலிலேயே ஐவர் காயமடைந்துள்ளதாக வசந்த முதலிகே தெரிவிப்பு!

Published

on

Loading

பொலிஸார் நடத்திய தாக்குதலிலேயே ஐவர் காயமடைந்துள்ளதாக வசந்த முதலிகே தெரிவிப்பு!

சுகாதார அமைச்சுக்கு முன்னால் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த சுகாதார பட்டதாரிகள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் மீது பொலிஸார் நடத்திய தாக்குதலில் ஐந்து பேர் காயமடைந்துள்ளதாக அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் முன்னாள் அழைப்பாளர் வசந்த முதலிகே தெரிவித்துள்ளார். தனது முகநூல் கணக்கில் பதிவொன்றை இட்டு அவர் இவ்விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

இன்று அதிகாலை 2 மணி முதல் 2:30 வரை பொலிஸாரின் தாக்குதல் நடந்ததாக அவர் தெரிவித்தார். குறித்த போராட்டத்தின் போது பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான ஒருங்கிணைப்பாளர் உட்பட 27 மாணவர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Advertisement

சுகாதார பட்டதாரிகள் மற்றும் மாணவர்கள் பல கோரிக்கைகளின் அடிப்படையில் முந்தைய அரசாங்கங்களுடனும் தற்போதைய அரசாங்கத்துடனும் கலந்துரையாடல்களை நடத்தினர்.

அரசாங்கங்கள் தீர்வுகளை வழங்காமல் தாமதப்படுத்தியதன் காரணமாக, சுகாதார அமைச்சுக்கு முன்னால் உள்ள பகுதியில் இந்த போராட்டம் இடம்பெற்றதாக வசந்த முதலிகே சுட்டிக்காட்டியிருந்தார்.

இந்த சம்பவம் இலங்கையில் போராட்டங்களை நடத்த முடியாதா என்ற பிரச்சினையை எழுப்புவதாக அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் முன்னாள் ஒருங்கிணைப்பாளர் கேள்வியெழுப்பியுள்ளார்.

Advertisement

மேலும், போராட்டம் நடத்துவது பற்றி தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கு சொல்லத் தேவையில்லை என்றும், தற்போதைய ஆட்சியாளர்கள் பல சந்தர்ப்பங்களில் போராட்டம் நடத்தியுள்ளனர் என்றும் வசந்த முதலிகே வலியுறுத்தியுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன