இலங்கை
மன்னார் பிரதேசசபைக்கு 10 வேட்புமனுக்கள் ஏற்பு

மன்னார் பிரதேசசபைக்கு 10 வேட்புமனுக்கள் ஏற்பு
மன்னார் மாவட்டத்தில் இரண்டு கட்சிகளின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில், 10 வேட்புமனுக்கள் ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது.
மன்னார் பிரதேசசபைத் தேர்தலுக்கு 12 தரப்புகள் கட்டுப்பணம் செலுத்தியிருந்தன. இவற்றின் வேட்புமனுக்கள் நேற்று ஏற்கப்பட்ட நிலையில், இரண்டு கட்சிகளின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.
ஒரு கட்சியின் வேட்புமனு தாமதம் காரணமாகவும், இன்னொரு கட்சியின் வேட்புமனு வேட்பாளர்கள் போதாமை காரணமாகவும் நிராகரிக்கப்பட்டுள்ளன. 9 கட்சிகள் ஒரு சுயேச்சை என பத்து தரப்புகள் மன்னார் பிரதேசசபைத் தேர்தலில் போட்டியிடவுள்ளன.