Connect with us

சினிமா

மோசடிகளை நம்ப வேண்டாம்…! – ராஜ்கமல் பிலிம்ஸ் வெளியிட்ட அதிரடி எச்சரிக்கை!

Published

on

Loading

மோசடிகளை நம்ப வேண்டாம்…! – ராஜ்கமல் பிலிம்ஸ் வெளியிட்ட அதிரடி எச்சரிக்கை!

தமிழ் சினிமாவின் கம்பீரமான நிறுவனங்களில் ஒன்றான ‘ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல்’, சமீபத்தில் முக்கிய அறிவிப்பொன்றை ‘X’ தளத்தில் வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பு, பட வாய்ப்புகளை நம்ப வைத்து பணம் கேட்கும் போலியான ஏஜென்டுகள் தொடர்பானதாகும்.ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் அந்த அறிக்கையில்,”நாங்கள் தயாரிக்கும் திரைப்படங்களுக்காக எந்த ஒரு ஏஜென்டுகளையும் நாங்கள் நியமிக்கவில்லை என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கின்றோம்” என தெளிவாகக் கூறியுள்ளது. அத்துடன் அவர்களது பெயரை பயன்படுத்தி, பட வாய்ப்பு தருவதாகக் கூறி நடைபெறும் மோசடிகளில் ஈடுபடுவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.இந்த அறிவிப்புக்கு பின்னணியாக, தற்போது ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரித்து வரும் பெரிய திரைப்படங்கள் அதிகமாவே காணப்படுகின்றன. அந்தவகையில் சமூக வலைத்தளங்கள், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் போன்ற செயலிகளில், “ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கும் புதிய படங்களுக்கு நடிகர் மற்றும் நடிகை தேவை என போலி தகவல்கள் பரவியதாக புகார்கள் எழுந்துள்ளன.இதன் மூலம், புகழ்பெற்ற நிறுவனத்தின் நம்பிக்கையை தவறாகக் கையாளும் சிலர் எதிர்கொள்ளும் பாதிப்பு கடுமையானதாக இருக்கும் என்பதும் தெரிகின்றது. இந்த நிலையில், சினிமாவில் வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்ற ஆசையுடன் இருக்கும் நபர்கள், எந்த ஒரு வாய்ப்பையும் சரிபார்க்காமல் பணம் செலுத்துவது, தனிப்பட்ட தகவல்களை பகிர்வது போன்ற செயல்கள் தவிர்க்கப்பட வேண்டும் என்பதையும் இந்த அறிவிப்பு வலியுறுத்துகின்றது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன