இலங்கை
வாக்குறுதியளித்து விட்டு செய்யாமல் விட்ட ஒன்றை காட்டுங்கள் ; எதிர்க்கட்சிகளுக்கு சவால்!

வாக்குறுதியளித்து விட்டு செய்யாமல் விட்ட ஒன்றை காட்டுங்கள் ; எதிர்க்கட்சிகளுக்கு சவால்!
தேசிய மக்கள் சக்தி செய்வதாக வாக்குறுதியளித்து நிறைவேற்றாத ஒன்றை காட்ட முடியுமா என தான் எதிர்க்கட்சிகளுக்கு சவால் விடுவதாக பிரதி அமைச்சர் எரங்க குணசேகர தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
மக்கள் தமது அரசாங்கத்திற்கு அறுபது மாதங்களாக அதிகாரத்தை வழங்கியுள்ளனர். அதற்கான பலமான தொடக்கத்தை அரசாங்கம் ஏற்கனவே எடுத்துள்ளது.
எதிர்வரும் தேர்தலிலும் தேசிய மக்கள் படையை வெற்றியடையச் செய்ய மக்கள் அணிவகுத்து நிற்கின்றனர்.
நாம் மக்களுடன் அரசியல் செய்கிறோம். அதனால் எதிர்க்கட்சிகளுக்கு பயமில்லாது செயல்படுகிறோம் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.