Connect with us

இலங்கை

11 இளைஞர்கள் கடத்தல்; கர்ணாகொட விசாரணையில் இருந்து இரு நீதிபதிகள் விலகல்

Published

on

Loading

11 இளைஞர்கள் கடத்தல்; கர்ணாகொட விசாரணையில் இருந்து இரு நீதிபதிகள் விலகல்

 அட்மிரல் ஆஃப் தி ஃப்ளீட் வசந்த கர்ணாகொடவின் மனு விசாரணையில் இருந்து விலகுவதாக உச்ச நீதிமன்ற நீதிபதிகள் இருவர் அறிவித்தனர்.

2008 ஆம் ஆண்டு கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் போனது தொடர்பாக  கடற்படைத் தளபதி அட்மிரல் ஆஃப் தி ஃப்ளீட் வசந்த கர்ணாகொடவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட குற்றச்சாட்டுகளை திரும்பப் பெறுவதற்கு சட்டமா அதிபர் எடுத்த முடிவுக்கு எதிராக காணாமல் போன இளைஞர்களின் உறவினர்கள் இந்த மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்துள்ளனர்.

Advertisement

இந்த மனு நேற்று (28) திலீப் நவாஸ், ஜனக் டி சில்வா மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகிய மூன்று நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது தனிப்பட்ட காரணங்களுக்காக இந்த மனு விசாரணையில் இருந்து விலகுவதாக நீதிபதிகள் திலீப் நவாஸ் மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகியோர் தெரிவித்தனர்.

அதன்படி, உண்மைகளை உறுதி செய்வதற்காக இந்த மனு செப்டம்பர் 15 ஆம் தேதி வேறு நீதிபதிகள் அமர்வு முன்பு விசாரணைக்கு வர உள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன