உலகம்
ரஷ்ய ஜனாதிபதியின் கார் வெடித்துச் சிதறியது!

ரஷ்ய ஜனாதிபதியின் கார் வெடித்துச் சிதறியது!
ரஷ்ய ஜனாதிபதி விளாதிமீர் புட்டினுக்கு சொந்தமான கார் வெடித்த சம்பவம், அந்நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உலகளவில் அதிகப்படியான பாதுகாப்பைக் கொண்டிருக்கும் தலைவர்களில் ஒருவரான ரஷ்ய ஜனாதிபதி விளாதிமீர் புட்டின் (72) உயிருக்கு அச்சுறுத்தல்கள் இருப்பதால், அவருக்கு வழங்கப்படும் பாதுகாப்புக்காக ரஷ்ய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அவர் ஏதேனும் ஓரிடத்துக்குச் செல்ல வேண்டுமென்றால், அதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் சில வாரங்களுக்கு முன்னதாகவே தொடங்கப்பட்டு விடும்.
இந்த நிலையில், புட்டினின் பாதுகாப்பு படையில் இருந்த கார் ஒன்று திடீரென வெடித்துச் சிதறியது. ரஷ்யாவைச் சேர்ந்த ஆரஸ் நிறுவனம் தயாரித்த ஆரஸ் லிமோசின் கார், மொஸ்கோ ரஷ்ய உளவுத்துறை தலைமையகத்தின் அருகே நிறுத்தப்பட்டிருந்தபோது, வெடித்துச் சிதறியது.
இந்த விபத்தின்போது, காரில் ஜனாதிபதி புட்டின் பயணிக்கவில்லை என்பதால், உயிர் தப்பினார். இருப்பினும், இந்த விபத்து குறித்து தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. கார் என்ஜினில் தீவிபத்து ஏற்பட்டு, பின்னர் உட்புறமும் பரவியதாகக் கூறுகின்றனர்.