Connect with us

இலங்கை

இந்திய பிரதமரின் விஜயத்தால் கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம்!..

Published

on

Loading

இந்திய பிரதமரின் விஜயத்தால் கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம்!..

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயத்தை முன்னிட்டு கொழும்பு மற்றும் பல பகுதிகளில் விசேட போக்குவரத்துத் திட்டம் மற்றும் சிறப்பு பாதுகாப்புத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக உள்ளதாக இலங்கை பொலிஸ் அறிவித்துள்ளது.

பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க இதனைத் தெரிவித்துள்ளார். 

Advertisement

“இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயம் ஏப்ரல் 4 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. 

இந்தப் பயணத்தைக் கருத்தில் கொண்டு, இலங்கை பொலிஸ் விசேட போக்குவரத்துத் திட்டத்தையும் சிறப்புப் பாதுகாப்புத் திட்டத்தையும் செயல்படுத்தும். 

அதன்படி, ஏப்ரல் 4 ஆம் திகதி மாலை 6.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலை மற்றும் பேஸ்லைன் வீதி ஆகியவை அவ்வப்போது மூடப்பட வேண்டியுள்ளது. 

Advertisement

“இந்த காலகட்டத்தில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு செல்லும் மக்கள், இந்த வீதிகள் மூடப்படுவதைக் கருத்தில் கொண்டு தங்கள் பயண ஏற்பாடுகளைத் திட்டமிடுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர். 

“ஏப்ரல் 5 ஆம் திகதி, கொழும்பு – காலி முகத்திடல் பகுதி, சுதந்திர சதுக்கத்தைச் சுற்றியுள்ள பகுதி மற்றும் பத்தரமுல்லையில் உள்ள அபே கம வளாகத்திற்கு அருகில் உள்ள வீதிகள் அவ்வப்போது மூடப்பட வேண்டியிருக்கும்.” 

“இந்த விசேட போக்குவரத்துத் திட்டத்திற்கு அனைத்து சாரதிகளும் பொதுமக்களும் ஆதரவளிக்குமாறு இலங்கை பொலிஸ் கோரியுள்ளது” என்றார். (ப)

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன