Connect with us

இலங்கை

தமிழர் பகுதியில் அதிகரிக்கும் பழுதடைந்த பழங்களின் விற்பனை ; மக்களே அவதானம்

Published

on

Loading

தமிழர் பகுதியில் அதிகரிக்கும் பழுதடைந்த பழங்களின் விற்பனை ; மக்களே அவதானம்

பழுதடைந்த பழ விற்பனை காரணமாக நுகர்வோர் பாதிக்கப்பட்டு வருவதாக குற்றஞ்சாட்டப்படுகிறது.

அம்பாறை மாவட்டம் கல்முனை வடக்கு, கல்முனை தெற்கு, சாய்ந்தமருது ,காரைதீவு, நிந்தவூர், சம்மாந்துறை, சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் பழங்கள் விற்பனை செய்யும் நிலையங்களில் இவ்வாறு பழுதடைந்த பழ வகைகள் விற்பனை அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

இதனால் நுகர்வோர்கள் சுகாதார ரீதியாக பல்வேறு பாதிப்புக்களை எதிர்கொள்வதாக குற்றஞ்சாட்டுகின்றனர்.

கடந்த காலங்களில் சுகாதார சேவைகள் பணிப்பாளர்  ஆலோசனைக்கமைய மேற்படி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் திடீர் களப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

மேலும் முறையற்ற வகையில் உணவு தயாரிக்கும் நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதுடன் திடீர் களப் பரிசோதனையின் போது ஹோட்டல்கள், உணவகங்கள், மரக்கறி விற்பனை நிலையங்கள் மற்றும் பழக்கடை போன்றனவும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

Advertisement

ஆனால் பொது சுகாதார பரிசோதகர்களின் திடீர் பரிசோதனை தொய்வின் காரணமாக இவ்வாறு தற்போது பழுதடைந்த பழ விற்பனை அதிகரித்தள்ளதாக நுகர்வோர் சுட்டிக்காட்டுகின்றனர்.

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன