சினிமா
“திருமணமான ஆணுடன் டேட்டிங் கட்..” திவ்யா பாரதி விளக்கம்..!

“திருமணமான ஆணுடன் டேட்டிங் கட்..” திவ்யா பாரதி விளக்கம்..!
முன்னணி இசையமைப்பாளர் ஜி வி பிரகாஷ்குமார் பாடகி சைந்தவியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாட்டின் காரணமாக விவாகரத்து செய்து கொள்வதாக அறிவித்து இருந்தனர். உறவு ரீதியில் பிரிந்து இருந்தாலும் தொழிலில் இருவருக்கு இடையில் நல்ல உறவு இருந்து வந்தது.சமீபத்தில் இவருக்கும் பிரபல நடிகை திவ்யா பாரதிக்கும் இடையில் காதல் இருப்பதாக பல கிசு கிசுக்கள் பல வந்தது. இந்த தகவல் பொய்யானது என நடிகை கூறியும் மேலும் பல தகாத செய்திகள் வலம் வந்து கொண்டிருக்கின்றன. இதற்கெல்லாம் பதிலடி கொடுக்கும் விதமாக நடிகை விளக்கமளித்துள்ளார்.மேலும் அவர் இது குறித்து “ஜிவி பிரகாஷின் குடும்ப விவகாரத்தில் எனக்கு எந்த விதமான தொடர்பும் இல்லை. நான் நிச்சயமாக ஒரு திருமணமான ஆணுடன் டேட்டிங் செய்ய மாட்டேன். ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளால் எனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுவதை நான் மறுக்கிறேன். எதிர்மறையைப் பரப்புவதை நிறுத்துங்கள்.” என கூறியுள்ளார்.