Connect with us

இந்தியா

வக்பு மசோதா விவாதம்: டெல்லியில் 123 சொத்துக்களை மாற்றிய யு.பி.ஏ அரசு – கேள்வி எழுப்பிய கிரண் ரிஜிஜு

Published

on

kiren

Loading

வக்பு மசோதா விவாதம்: டெல்லியில் 123 சொத்துக்களை மாற்றிய யு.பி.ஏ அரசு – கேள்வி எழுப்பிய கிரண் ரிஜிஜு

வக்பு (திருத்த) மசோதாவை மக்களவையில் புதன்கிழமை தாக்கல் செய்தபோது, ​​மத்திய சிறுபான்மை விவகார அமைச்சர் கிரண் ரிஜிஜு, முந்தைய யு.பி.ஏ அரசாங்கம் மார்ச் 2014-ல் டெல்லியில் உள்ள 123 முக்கிய சொத்துக்களை அடையாள நீக்கம் செய்து வக்ப் வாரியத்திடம் வழங்க எடுத்த முடிவைக் குறிப்பிட்டார்.ஆங்கிலத்தில் படிக்க:அப்படியானால் என்ன நடந்தது?அந்த நேரத்தில் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகம் 123 சொத்துக்களை அடையாளத்தை நீக்குவதற்கும், டெல்லி வக்பு வாரியத்திற்கு உரிமையை மாற்றுவதற்கும் ஒரு வரைவு அமைச்சரவைக் குறிப்பைத் தயாரித்தது, இது 1911 – 1915-ம் ஆண்டில் பிரிட்டிஷ் அரசாங்கத்தால் கையகப்படுத்தப்பட்டதை “ரத்து” செய்தது. இந்த சொத்துக்களில் மொத்தம் 61 நிலம் மேம்பாட்டுத் துறைக்குச் சொந்தமானவை, மீதமுள்ளவை டெல்லி மேம்பாட்டு ஆணையத்திற்கு (DDA) சொந்தமானவை.பொதுத் தேர்தலுக்கு முன்பு தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வருவதற்கு ஒரு இரவு முன்பு, மார்ச் 2014-ல் இந்த மாற்றம் இறுதியாக செய்யப்பட்டது.2014 மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, டெல்லி உயர் நீதிமன்றத்தில் வி.எச்.பி தாக்கல் செய்த மனுவைத் தொடர்ந்து, 123 சொத்துக்கள் கையகப்படுத்தப்பட்டது குறித்து தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு விசாரணையைத் தொடங்கியது. இது “அரசியல் காரணங்களுக்காக” செய்யப்பட்டதாகக் கூறியது.“கையகப்படுத்தப்பட்ட பின்னர் அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்பட்ட சொத்துக்கள்… நிலம் கையகப்படுத்தல் சட்டத்தின் பிரிவு 48-ன் கீழ் அதிகாரத்தைப் பயன்படுத்தி அவற்றின் அடையத்தை நீக்கவோ அல்லது கையகப்படுத்தலில் இருந்து விடுவிக்கவோ முடியாது” என்று வி.எச்.பி தனது மனுவில் தெரிவித்துள்ளது.இந்த சொத்துக்களில் பெரும்பாலானவை கன்னாட் பிளேஸ், மதுரா சாலை, லோதி சாலை, மான்சிங் சாலை, பண்டாரா சாலை, அசோகா சாலை, ஜன்பத், நாடாளுமன்ற கட்டிடம், கரோல் பாக், சதார் பஜார், தர்யாகஞ்ச் மற்றும் ஜங்புரா ஆகிய இடங்களில் அமைந்துள்ளன. ஒவ்வொரு சொத்துக்களிலும் ஒரு மசூதி இருந்தாலும், சிலவற்றில் கடைகள் மற்றும் குடியிருப்புகள் உள்ளன.காங்கிரஸ் தலைவரும் அப்போதைய சிறுபான்மை விவகார அமைச்சருமான சல்மான் குர்ஷித்துக்கு எதிராக புகார் அளிக்கப்பட்டதாக நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சர் எம்.வெங்கையா நாயுடு தெரிவித்தார். “கடந்த ஆண்டு பதவி விலகுவதற்கு முன்னதாக, வாக்கு வங்கி அரசியலை மனதில் கொண்டு, இந்த சொத்துக்களை மாற்றுவதில் அவர் முக்கிய பங்கு வகித்தார்” என்று அவர் 2015-ல் தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் கூறினார்.தற்செயலாக, ஜனவரி 2013-ல், அப்போதைய அட்டர்னி ஜெனரல் ஜி.இ. வாகன்வதி, சொத்துக்களை மாற்றுவதற்கான திட்டம் சட்டப்பூர்வமாக சாத்தியமில்லை என்று அரசாங்கத்திற்கு அறிவுறுத்தினார். அதன் பிறகு, சிறுபான்மை விவகார அமைச்சகம் மத்திய வக்பு கவுன்சிலின் கீழ் நிபுணர்கள் குழுவை அமைத்தது. நிபுணர் குழு இந்த திட்டத்தை ஆதரித்தது, அதைத் தொடர்ந்து வாகன்வதி ஒப்புக்கொண்டார்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன