Connect with us

இலங்கை

வடக்கு – கிழக்கு அபிவிருத்தி 8 ஆண்டுகளுக்கு 500 மில். டொலர் உலக வங்கி வழங்கும்

Published

on

Loading

வடக்கு – கிழக்கு அபிவிருத்தி 8 ஆண்டுகளுக்கு 500 மில். டொலர் உலக வங்கி வழங்கும்

வடக்கு – கிழக்கு மாகாணத்தில் உலக வங்கியால் பெரும் அபிவிருத்தித் திட்டங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன. இதற்காக, 500 மில்லியன் டொலர் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 2026ஆம் ஆண்டுதொடக்கம் 2034ஆம் ஆண்டுவரை மூன்று கட்டங்களாக இந்த அபிவிருத்தித் திட்டங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன.

உலக வங்­கி­யின் நிபு­ணத்­து­வக் குழு­வுக்­கும், வடக்கு மாகாண ஆளு­நர் நாக­லிங்­கம் வேத­நா­ய­க­னுக்­கும் இடை­யி­லான கலந்­து­ரை­யா­டல் நேற்­று­முன்­தி­னம் செவ்­வாய்க்­கி­ழமை இடம்­பெற்­ற­போது இந்த விட­யம் தெரி­விக்­கப்­பட்­டது.

Advertisement

இதன்­போது போரால் வடக்கு மாகா­ணம் கடந்த மூன்று தசாப்­தங்­க­ளா­கப் பெரும் பாதிப்பை எதிர்­கொண்­டுள்­ள­தாக சுட்­டிக்­காட்­டிய வடக்கு ஆளு­நர் கிரா­மங்­கள் அபி­வி­ருத்தி செய்­யப்­பட வேண்­டும் என வலி­யு­றுத்­தி­னார்.

தொழிற்­சா­லை­கள் வடக்­கில் மூடப்­பட்­டுள்­ள­மை­யால் இளை­யோர் வேலை வாய்ப்­புக்­களை இழந்­துள்­ள­னர் எனத் தெரி­வித்த ஆளுநர், விவ­சா­யம் மற்­றும் மீன்­பிடி வடக்­கின் முக்­கிய துறை­க­ளா­க­வுள்ள நிலை­யில் உற்­பத்­திப் பொருட்­க­ளைப் பெறு­மதி சேர் பொருட்­க­ளாக மாற்றி ஏற்­று­மதி செய்­வ­தற்­கான வாய்ப்­பு­களை உரு­வாக்­கு­வ­தன் மூலம் அதி­க­ள­வா­னோ­ருக்கு வேலை வாய்ப்­புக்­களை வழங்க முடி­யு­மெ­ன­வும் சுட்­டிக்­காட்­டி­னார்.

அதற்கு நிபு­ணத்­து­வக் குழு­வி­னர் சாதகமான பதிலை வழங்கினார்கள். சுற்­று­லாத்­துறை, தக­வல் தொழில்­நுட்­பத்­துறை, விவ­சா­யம், மீன்­பிடி ஆகிய துறை­கள் தொடர்­பில் கூடு­தல் கவ­னம் செலுத்­த­வுள்­ள­தாக  சுட்­டிக்­காட்­டி­னர்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன