Connect with us

இந்தியா

“தமிழகத்திற்கு 3 மடங்கு நிதி தந்தும் சிலர் அழுகிறார்கள்“ – ராமேஸ்வரத்தில் பிரதமர் மோடி கடும் விமர்சனம்

Published

on

modi pamban

Loading

“தமிழகத்திற்கு 3 மடங்கு நிதி தந்தும் சிலர் அழுகிறார்கள்“ – ராமேஸ்வரத்தில் பிரதமர் மோடி கடும் விமர்சனம்

ராமேசுவரத்தில் பாம்பன் புதிய ரயில் பாலத்தை திறந்து வைத்து பிரதமர் மோடி பேசியதாவது: என் அன்பு தமிழ் சொந்தங்களே.. இன்று ராமநவமி, இது ஒரு பவித்திரமான நாள். தமிழகத்தின் சங்க இலக்கியத்திலும் ராமரை பற்றி கூறப்பட்டுள்ளது. ராமேசுவரம் என்ற இந்த புண்ணிய பூமியிலிருந்து இந்திய மக்கள் அனைவருக்கும் ராம நவமி தின வாழ்த்துகள். ராமநாத சுவாமி கோயிலில் இன்று வழிபட்டபோது ஆசிகள் நிரம்ப பெற்றவனாக நான் உணர்ந்தேன். இந்த விஷேச நாளில் ரூ.8,300 கோடி மதிப்பிலான நலத்திட்டங்களை அற்பனிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. இந்த ரயில் மற்றும் சாலைத் திட்டங்கள் தமிழ்நாட்டிலே இணைப்புத் திறனை வலுப்படுத்தும். இந்த திட்டங்களை பொருத்து தமிழ்நாட்டின் என் சகோதர சகோதரிகளுக்கு நான் என வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.அப்துல் கலாம் மண் – மோடிஇது பாரத ரத்னா கலாம் அவர்களின் பூமி அறிவியலும் ஆன்மிகமும் ஒன்றை ஒன்று நிறைவு செய்வவை என்பது அவரின் வாழ்வு நமக்கு காட்டுகிறது. அதே போல ராமேஸ்வரத்துக்கான இந்த புதிய பாம்பன் பாலமும் கூட தொழில் நுட்பத்தையும் பாரம்பரியத்தையும் ஒன்று சேர்க்கிறது. ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பலமையான ஒரு நகரம் 21ம் நூற்றாண்டின் ஒரு பொறியியல் அற்புதத்தால் இணைக்கப்படிருக்கிறது. தங்களது தீவிரமான உழைப்பிற்காக நான் நமது பொறியாளர்களுக்கு என் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.தமிழ்நாட்டிற்கு 3 மடங்கு அதிக நிதி:தமிழகத்தின் வளர்ச்சிக்காக கடந்த 10 ஆண்டுகளில் 3 மடங்கு நிதியை மத்திய அரசு வழங்கியுள்ளது. திமுக அங்கம் வகித்த காங்கிரஸ் கூட்டணி அரசை விட தமிழ்நாட்டுக்கு அதிக நிதி தந்துள்ளோம். மத்திய அரசு அனைத்தும் செய்தும் கூட சிலர் தமிழகத்தில் அழுது கொண்டே இருக்கிறார்கள். பாஜக ஆட்சியில் அதிக வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. பாம்பன் பாலத்தை கட்டிய குஜராத்தி:100 ஆண்டுகளுக்கு முன்னர் பழைய பாம்பன் பாலத்தை கட்டியவர் ஒரு குஜராத்தி; 100 ஆண்டுகளுக்கு பின் புதிய பாம்பன் பாலத்தை திறப்பதும் இந்த குஜராத்திதான் என்றும் குறிப்பிட்டார். தமிழக தலைவர்கள், கடிதங்களில் ஆங்கிலத்தில் கையெழுத்திடுகின்றனர்; தமிழில் கையெழுத்திடுங்கள் என்று பிரதமர் மோடி தமிழக தலைவர்களுக்கு அறிவுறுத்தினார். தமிழ் மொழி, மரபு அனைத்து இடங்களுக்கும் சென்று சேர மத்திய அரசு முயற்சிக்கிறது என்றும் அவர் கூறினார்.மீனவர்களுக்காக மத்திய அரசு:மீனவர்களின் துயர காலங்களில் தோளோடு தோளாக நிற்கிறது மத்திய அரசு. 10 ஆண்டுகளில் மட்டும் 3,700 மீனவர்கள், இலங்கையில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர். இவர்களிலேயே 600-க்கும் அதிகமானோர் ஓராண்டிலயே மீட்கப்பட்டுள்ளனர். தூக்கு மேடையில் நின்ற தமிழ்நாட்டு மீனவர்களை இலங்கையில் இருந்து மத்திய அரசுதான் மீட்டு வந்தது.தமிழில் மருத்துவ படிப்பு – வலியுறுத்தல்தமிழில் மருத்துவ படிப்பை கொண்டுவர வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம். ஏழை குழந்தைகளும் மருத்துவ படிப்பை தமிழ் மொழியில் படிக்க, நூல்களை தமிழில் தமிழ்நாடு அரசு செய்து தர வேண்டும். தமிழ்நாட்டுக்கு 10 ஆண்டுகளில் 11 மருத்துவ கல்லூரிகளுக்கு அனுமதி தந்துள்ளோம். தமிழ்நாட்டி மட்டும் 1,400 மக்கள் மருந்தகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் 80% தள்ளுபடியில் மருந்துகள் கிடைக்கின்றன. இதன் மூலம் மக்களுக்கு ரூ700 கோடி சேமிப்பாகி உள்ளது- சாதனை முதலீடுகள்:நாடு முழுவதும் 4 கோடிக்கும் அதிகமான கான்கிரீட் வீடுகள் ஏழைகளுக்கு கிடைத்து உள்ளன. தமிழ்நாட்டில் 12 லட்சத்துக்கும் மேற்பட்ட கான்கிரீட் வீடுகள் ஏழைகளுக்கு கிடைத்துள்ளன. நாட்டின் இளைஞர்களுக்கு பல்வேறு திட்டங்கள் மூலம் வேலை வாய்ப்புகள் உருவாக்கித் தரப்பட்டு வருகின்றன. சிலர் அழுது கொண்டே இருக்கின்றனர்:10 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழகத்துக்கு வெறும் 900 கோடி ரூபாய்தான் தரப்பட்டது; இந்த ஆண்டு ரயில்வே திட்டத்துக்கு ரூ.6,000 கோடிக்கும் அதிகமாக ஒதுக்கி உள்ளது. மத்திய அரசு இவ்வளவு செய்தும் சிலர் (திமுக கூட்டணி) அழுது கொண்டே இருக்கின்றனர்; அவர்களால் அழத்தான் முடியும்; அவர்கள் அழுதுவிட்டு போகட்டும். தமிழகத்தின் வலிமை உயர்ந்தால் இந்தியாவின் வளர்ச்சியும் விரைவாகும். 10 ஆண்டுகளில் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு 2014-க்கு முன்னர் திமுக கூட்டணி ஆட்சியில் கொடுத்ததைவிட 3 மடங்கு கூடுதல் நிதியை மத்திய அரசு அளித்திருக்கிறது. இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன