இந்தியா
புதுச்சேரி கடற்கரை சாலையில் ஆட்டிசம் விழிப்புணர்வு மாரத்தான்; மாணவர்கள் உற்சாகமாக பங்கேற்பு

புதுச்சேரி கடற்கரை சாலையில் ஆட்டிசம் விழிப்புணர்வு மாரத்தான்; மாணவர்கள் உற்சாகமாக பங்கேற்பு
ரீபார்ன் மல்டிஸ்பெஷாலிட்டி தெரபி சென்டர் சார்பாக, உலக ஆட்டிசம் விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு புதுச்சேரி கடற்கரை சாலையில் ஆட்டிசம் விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடைபெற்றது. இதில் 300-க்கும் மேற்பட்ட என்.என்.எஸ். (NSS) மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். இதன் மூலமாக பொதுமக்களுக்கு ஆட்டிசம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினராக புதுச்சேரி சட்டமன்ற பேரவைத் தலைவர் செல்வம் கலந்து கொண்டு மாரத்தான் போட்டியை கொடி அசைத்து விழாவை தொடங்கி வைத்தார். கடற்கரை சாலையில் தொடங்கிய இந்த மாரத்தான் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் கடற்கரை சாலையை வந்தடைந்தது. தொடர்ந்து , வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.