இலங்கை
தே.ம.சக்தி எம்.பி. மாரடைப்பால் உயிரிழப்பு!

தே.ம.சக்தி எம்.பி. மாரடைப்பால் உயிரிழப்பு!
தேசிய மக்கள் சக்தியின் கேகாலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கோசல நுவன் ஜயவீர (வயது-38) மாரடைப்புக் காரணமாக உயிரிழந்துள்ளாார்.
திடீர் சுகவீனமுற்ற அவர் கரவனெல்ல ஆதார மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். மாரடைப்புக் காரணமாக அவர் உயிரிழந்தார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேகாலை மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி 61 ஆயிரத்து 713 வாக்குகளைப் பெற்று கோசல நுவன் ஜயவீர நாடாளுமன்றத்துக்குத் தெரிவாகியிருந்தார்.