இலங்கை
போதை மாத்திரைகளோடு யாழில் இளைஞன் கைது!

போதை மாத்திரைகளோடு யாழில் இளைஞன் கைது!
போதைமாத்திரைகளை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் யாழ்ப்பாணம் நகரப்பகுதியில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இரகசியத் தகவலின் அடிப்படையில் யாழ்ப்பாணம் மாவட்டக் குற்றத் தடுப்புப் பிரிவுப் பொலிஸார் சந்தேநபரை நேற்றுக் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டபோது அவரிடம் 10 போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டன, கைது செய்யப்பட்டவர் யாழ்ப்பாணம், ஐந்துசந்திப் பகுதியைச் சேர்ந்த 18 வயதுடையவர் என்று தெரிவித்த பொலிஸார், மேலதிக விசாரணைகளைத் தொடர்ந்து சந்தேகநபரின் வீட்டில் இருந்து 75 போதை மாத்திரைகள் மீட்கப்பட்டன என்றும் தெரிவித்தனர்.
சந்தேகநபரிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றன என்றும், சந்தேகநபரை நீதிமன்றில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என்றும் பொலிஸார் குறிப்பிட்டனர்.