சினிமா
சூர்யா பாடலுக்கு செம்ம குத்தாட்டம் போட்ட லப்பர் பந்து நடிகை.!இன்ஸ்டாவில் வெளியான வீடியோ..!

சூர்யா பாடலுக்கு செம்ம குத்தாட்டம் போட்ட லப்பர் பந்து நடிகை.!இன்ஸ்டாவில் வெளியான வீடியோ..!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சூர்யா தனது சிறப்பான நடிப்பால் பல வெற்றிப் படங்களைக் கொடுத்து வருகின்றார். அவர், சமீபத்தில் வெளியான ‘கங்குவா’ திரைப்படத்தின் மூலம் ரசிகர்களின் மனங்களைக் கவர்ந்திருந்தார். பெரும் எதிர்பார்ப்புடன் வெளியான இப்படம், ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்த்த அளவிலான வரவேற்பை பெறாமல் எதிர்மறையான விமர்சனங்களையே சந்தித்தது. இது சூர்யாவிற்கு பெரும் அதிர்ச்சி அளித்திருந்தது.‘கங்குவா’ படத்திற்குப் பிறகு, சூர்யா தனது அடுத்த படமான ‘ரெட்ரோ’ படத்தில் சிறப்பாக நடித்து வருகின்றார். கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவான இப்படம், 80களின் பின்னணியில் அமைந்த ஒரு புதுமையான கதையம்சத்துடன் உருவாகியுள்ளது. படப்பிடிப்புப் பணிகள் முழுமையாக முடிந்துவிட்ட நிலையில், மே 1ம் திகதி இப்படம் உலகமெங்கும் வெளியாவதற்காக தயாராகி வருகின்றது.தற்பொழுது ‘ரெட்ரோ’ படத்தின் முதல் பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் ஓரளவிற்கு இடம்பிடித்துள்ளது. அதைத் தொடர்ந்து சமீபத்தில் இப்படத்தின் இரண்டாவது பாடலான ‘கனிமா’ வெளியானது. இதனைத் தொடர்ந்து இப்பாடல் சமூக ஊடகங்களில் வெகுவாக டிரெண்டாகி வருகின்றது.’கனிமா’ பாடல் ஒரு மென்மையான மெலோடி பாடலாகும். காதல் உணர்வுகளை தழுவும் இந்த பாடலுக்கு இசை ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்திருக்கின்றது. பாடலின் வரிகள், இசை மற்றும் பின்னணி அமைப்பு ரசிகர்களை வெகுவாக ஈர்த்துள்ளது. குறிப்பாக, இளம் ரசிகர்கள் இந்தப் பாடலை சமூக ஊடகங்களில் ரீல்ஸ் வீடியோக்களாகப் பகிர்ந்து கொண்டு வருகின்றார்கள்.இந்த ‘கனிமா’ ட்ரெண்டில் தற்போது ‘லப்பர் பந்து’ படத்தில் நடித்த நடிகை சுவாசிகா இணைந்துள்ளார். இவர் ‘கனிமா’ பாடலுக்கு நடனமாடி வீடியோ ஒன்றினை உருவாக்கி தனது சமூக ஊடகப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இவரின் நடனத்தைப் பார்த்த ரசிகர்கள் ” எவ்வளவு அழகா டான்ஸ் ஆடுறாங்க” என்று கமெண்ட் செய்து வருகின்றார்கள்.