சினிமா
திரையுலகில் மீண்டும் ஒளிரவுள்ள ‘நினைத்தேன் வந்தாய்’ ஹீரோயினி..!சந்தோசத்தில் திரையுலகம்..!

திரையுலகில் மீண்டும் ஒளிரவுள்ள ‘நினைத்தேன் வந்தாய்’ ஹீரோயினி..!சந்தோசத்தில் திரையுலகம்..!
90களின் தொடக்கத்தில் தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி திரைப்படங்களில் சிறந்து விளங்கிய நடிகை ரம்பா, தனது அழகு, இனிமையான நடிப்பு மற்றும் அபாரமான நகைச்சுவைத் திறன் என்பன மூலம் ரசிகர்களின் மனதில் என்றும் உறைந்திருக்கும் பெயராக இருக்கின்றார்.ஜோடி, நினைத்தேன் வந்தாய் போன்ற படங்களில் அவர் வெளிப்படுத்திய அழகு மற்றும் நேர்த்தியான நடிப்பு ரசிகர்களை மயக்கியது. சமீபத்தில் நடிகை ரம்பா, தனது கணவருடன் சேர்ந்து திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்துள்ளார்.சாமி தரிசனத்துக்குப் பிறகு, வெளியே எதிர்பார்த்திருந்த செய்தியாளர்கள் அவரிடம் சில கேள்விகளை முன்வைத்தனர். அவரிடம், “திரையுலகுக்கு மீண்டும் திரும்பும் வாய்ப்பு இருக்கிறதா?” என்ற கேள்வி எழுப்பப்பட்டது.இதற்கு ரம்பா, “நல்ல படம் கிடைத்தால் நிச்சயமாக திரையுலகில் மீண்டும் நடிக்கத் தயார். சில ரசிகர்கள் என்னை விரும்புகிறார்கள் என்பது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கின்றது. ஆனால் கதையும் கதாபாத்திரமும் நல்லதாக இருக்க வேண்டும்.” எனக் கூறியுள்ளார்.