பொழுதுபோக்கு
போலீஸ் வேலைக்கு வந்த சிக்கல்: மனைவிக்கு உண்மையை சொல்வாரா கணவன்? ஜீ தமிழ் சீரியல் அப்டேட்

போலீஸ் வேலைக்கு வந்த சிக்கல்: மனைவிக்கு உண்மையை சொல்வாரா கணவன்? ஜீ தமிழ் சீரியல் அப்டேட்
அப்பா, அம்மாவை மறந்த கேசவன்.. கடைதிறப்பு விழாவில் காத்திருந்த அதிர்ச்சி – கெட்டிமேளம் இன்றைய எபிசோட் அப்டேட்கெட்டிமேளம் சீரியலின் நேற்றைய எபிசோடில் துளசி வெற்றியிடம் நன்றி சொல்லி போனில் பேசிய நிலையில் இன்று, கேசவனுக்கு லோன் கிடைக்க அவன் ஒரு ஹோம் அப்பிளையன்ஸ் கடையை திறக்க முடிவு செய்கிறான். இந்த விஷயம் அறிந்த லட்சுமி மிகுந்த சந்தோசப்படுகிறாள். அடுத்து வெற்றியின் வீட்டிற்கு சென்று எல்லாரையும் வரவேற்கிறான்.அடுத்து இரவு எல்லாரும் ஒன்று கூட கேசவன் கடை திறக்கும் விஷயத்தை பற்றி சொல்கின்றனர். எல்லாரும் கேசவனுக்கு வாழ்த்து சொல்ல துளசி வேறு வேலை காரணமாக வெளியே செல்வதால் கடை திறப்பு விழாவிற்கு வர முடியாது என்று மன்னிப்பு கேட்கிறாள்.மறுபக்கம் அஞ்சலி வீட்டில் இருக்க மகேஷ் ஆபிசில் இருந்து ஒரு ஐந்து பேர் வீட்டிற்கு வந்து பார்ட்டிக்கு ஏற்பாடு செய்திருப்பதாக சொல்லி அழைக்கின்றனர், அஞ்சலி அவர்கள் உபசரித்து பேசி கொண்டே இருக்க மகேஷ் டென்ஷன் ஆகிறான். அடுத்த நாள் கடை திறப்பு விழா ஏற்பாடுகள் நடக்க வெற்றியின் குடும்பத்தினர் வந்து இறங்குகின்றனர்.கேசவன் ரிப்பன் கட் செய்ய கத்திரிக்கோலை எடுத்து வந்து லட்சுமி சிவராமனை தாண்டி சென்று வெற்றியின் அப்பாவிடம் கொடுக்க லட்சுமி வருத்தமடைகிறாள். அடுத்து குத்துவிளக்கு ஏறிவதிலும் தனது மாமனாருக்கு முதல் உரிமை கொடுக்க லக்ஷ்மியின் வருத்தமும் கோபமும் மேலும் அதிகமாகிறது. லட்சுமி வருத்தமாக இருப்பதை பார்த்த சிவராமன் என்னாச்சு என்று கேட்க லட்சுமி தனது வருத்தத்தை சொல்ல சிவராமன் இதுல என்ன இருக்கு லட்சுமி? நம்ம பையன் நல்லபடியா வரணும்னு ஆசைப்பட்டோம். இது அது நடந்திருக்கு அது போதும் என சொல்கிறார்.மேலும் எனக்கு நீ இருக்க உனக்கு நான் இருக்க இதை தவிர நமக்கு என்ன வேணும் என ஆறுதல் சொல்கிறார். அதனை தொடர்ந்து வெற்றி கேசவனை தனியாக அழைத்து சென்று வாழ்த்து சொல்கிறான். உங்களை நான் எவ்வளவோ அவமானப்படுத்தி பேசி இருக்கேன். ஆனால் இப்போ என் அக்கா உங்க வீட்டில் வாழுறதை நினைத்து பெருமைப்படுறேன் என்று சொல்கிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்கப்போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.சண்முகம் குடும்பத்திற்கு எதிராக உருவாகும் புது வில்லி.. காத்திருக்கும் திருப்பங்கள் என்ன? அண்ணா சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்அண்ணா சீரியலின் நேற்றைய எபிசோடில் வீராவை அறைந்த கௌதமை சண்முகம் அறைந்து தங்கையிடம் மன்னிப்பு கேட்ட சொல்லிய நிலையில் இன்று, வைஜெயந்தி யாரு யாரு கிட்ட மன்னிப்பு கேட்கணும் என சத்தம் போடுகிறாள். வீராவும் ஊர் மக்களும் உங்க பையன் பண்ணது தப்பு, அவங்க கண்டிப்பா மன்னிப்பு கேட்டு தான் ஆகணும் என பேசுகின்றனர்.கடையில் இருந்து அங்கு வந்த முத்துப்பாண்டி வைஜெயந்திக்கு வணக்கம் சொல்லி வீரா ரொம்ப நல்ல பொண்ணு அவளும் எஸ்ஐ- ஆக போகிறாள் என்று சொல்ல எங்க வேலைக்கு சேர்ந்தாலும் எனக்கு கீழே தானே வேலை செய்யணும் என்று சொல்கிறார். வீராவும் மக்களும் நீங்க யாரா வேணா இருங்க.. தப்பு செய்தா மன்னிப்பு கேட்கணும்ல என்று பதில் கொடுக்க முத்துப்பாண்டி யாராவது வீடியோ எடுத்து போட்டுட்டா அது உங்களுக்கு தான் சிக்கல், மன்னிப்பு கேட்க சொல்லுங்க மேடம் என்று சொல்ல வைஜெயந்தி தனது மகனை மன்னிப்பு கேட்க சொல்கிறாள்.மன்னிப்பு கேட்ட கௌதம் என்னையே மன்னிப்பு கேட்க வச்சிட்டல உன்னை சும்மாவே விட மாட்டேன் என்று எச்சரித்து விட்டு கிளம்பி செல்கிறான். சண்முகம் குடும்பத்தினர் வீட்டிற்கு வந்ததும் முத்துப்பாண்டி வைஜயந்தி மோசமான போலீஸ் ஆபிசர் என்பதை சொல்கிறான். அடுத்து வீட்டிற்கு வந்த கௌதம் வீரா மீது கோபமாக இருக்க வைஜெயந்தி அவ மேல ஒரு எஃப்ஐஆர் போட்டு போலீஸ் ஆக முடியாத மாதிரி பண்ணிடுறேன் என்று சொல்ல கௌதம் அது மட்டும் போதுமா என ஆவேசப்படுகிறான். வைஜெயந்தி யாருக்கு என்ன பண்ணனும்னு எனக்கு தெரியும் என சொல்லி உள்ளே செல்கிறாள்.கௌதமின் பாட்டி உங்க அம்மா கிட்ட நீ எதுக்கு அனுமதி கேட்கிற? அவள என்ன பண்ணணுமோ அதை பண்ணு நான் பார்த்துக்கறேன் என்று ஏற்றி விடுகிறார். இப்படியான நிலையில் அடுத்து நடக்கப்போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.வேலையை காட்டிய மூலிகை பால்.. கார்த்தியிடம் கோபத்தை கொட்டிய ரேவதி – கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்கார்த்திகை தீபம், சீரியலின் நேற்றைய எபிசோடில் சாமுண்டீஸ்வரி மூலிகை பாலை குடித்த நிலையில் இன்று, மயில்வாகனம் மீதி இருக்கும் பாலை கொண்டு வந்து தனது மனைவி ரோகிணிக்கு கொடுக்க இருவருக்கும் இடையே நெருக்கம் அதிகமாகிறது. மறுபக்கம் ரூமுக்குள் வரும் ரேவதி கார்த்தியிடம் என்னோட புடவை புடிச்சிருக்கா? நகைகள் பிடிச்சிருக்கா? மேக்கப் பிடிச்சிருக்கா? ஏதாவது பிடிக்கலைன்னா சொல்லுங்க மாத்திட்டு வந்திருடுறேன்.இந்த வீட்டில் எல்லாம் நீங்க சொல்ற மாதிரி தானே நடக்குது என்று கோபப்படுகிறாள். கார்த்திக் ஏன் ரேவதி இப்படி எல்லாம் பேசுறீங்க? எனக்கும் இந்த கல்யாணம் நின்றதுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்று சொல்ல ரேவதி அதை ஏற்க மறுத்து தரையில் படுத்து தூங்க கார்த்திக் பெட்டில் படுத்து தூங்குகிறான். அடுத்த நாள் காலையில் தான் ஆசைப்பட்ட மாதிரியே ரோஹிணியுடன் நெருக்கமாக இருந்த சந்தோசத்துடன் மயில்வாகனம் வெளியே வருகிறான்.அதே போல் ராஜராஜனும் சந்தோசமாக வெளியே வர மயில்வாகனம் என்ன மாமா ரொம்ப சந்தோசமா வரீங்க என்று கலாய்க்கிறான். இதை தொடர்ந்து கார்த்திக் இன்ஸ்பெக்டர் ஒருவரை சந்தித்து மகேஷை கண்டு பிடிக்கணும், அவன் வந்தா தான் ரேவதிக்கு என்னை பற்றி புரிய வைக்க முடியும் என பேசுகிறான். இன்னொரு பக்கம் மாயா, சந்திரகலா மற்றும் சிவனாண்டி ஆகியோர் ஒன்று சேர்ந்து பேச மாயாவிடம் மகேஷ் காணவில்லை என போலீசில் கம்பளைண்ட் கொடுக்க சொல்கின்றனர். இப்படியான நிலையில் அடுத்து நடக்கப்போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.