Connect with us

இலங்கை

மாயாஜால யதார்த்தவாதம்; பொலிவியாவில் ஒரு போலி இந்து நாடு ; பேசுபொருளான நித்தியானந்தா!

Published

on

Loading

மாயாஜால யதார்த்தவாதம்; பொலிவியாவில் ஒரு போலி இந்து நாடு ; பேசுபொருளான நித்தியானந்தா!

 தலைமறைவாக உள்ள இந்திய மதகுரு நித்தியானந்தா உயிரிழந்ததாக அண்மையில் செய்தி வெளியான நிலையில், அது போலி தகவ்ல் என்றும் அவர் உயிரோடு இருப்பதாகவு அறிக்கப்பட்டிருந்த்து.

அதன்பின்ன நில ஆக்கிரமிப்பில் ஈடுபட்டதாக கைலாசாவாசிகளான் நித்தியானத்தாவின் சீஇடர்கள் பலை கைதானதாக தகவல் வெளியாகியிருந்த்து.

Advertisement

இந்நிலையில் தலைமறைவாக உள்ள இந்திய மதகுரு ஒருவர் தனக்கென ஒரு நாட்டை உருவாக்க முயல்கின்றார் என கார்டியன் தெரிவித்துள்ளது. .

அதோடு  அவரை பின்பற்றும் பலர் இலத்தீன் அமெரிக்காவின் பல நாடுகளில் புதிதாக தோன்றியுள்ளதுடன், ஈக்குவடோர் பராகுவே பொலிவியாவில் நிலங்களை கொள்வனவு செய்யும் நடவடிக்கைககளில் ஈடுபட்டுள்ளதாகவும் கார்டியன் தெரிவித்துள்ளது.

கடந்த வருடம் பொலிவியா அமேசனில் உள்ள பௌர் பழங்குடி இன மக்களின் பிரதிஒருவர் அவர்களின் பரந்தமழைக்காடுகளில் 60,000 ஹெக்டரை குத்தகைக்கு எடுக்கும் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டார்.

Advertisement

கயுபா பழங்குடி இனபிரதிநியொருவரும் இதேபோன்ற ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.வருடாந்தம் 55800 ஹெக்டயரை குத்தகைக்கு எடுத்தார்.

இந்த ஒப்பந்தங்கள் மூலம் இலாபம் சம்பாதித்த நாடு ஐக்கிய கைலாசா.

இது பழங்குடி இனமக்களிற்கு தன்னை ஒரு தேசமாக காட்டிக்கொண்டாலும்,எந்த நாட்டாலும் இதுவரை அங்கீகரிக்கப்படவில்லை , ஐநாவும் இதனை அங்கீகரிக்கவில்லை.

Advertisement

தனது ஆசிரமத்திற்காக குழந்தைகள் சிறுமிகளை கடத்தியதாகவும்,பாலியல் துஸ்பிரயோகங்களில் ஈடுபட்டதாகவும்,குற்றச்சாட்டுகளை எதிர்கொண்ட நிலையில் 2019ம் ஆண்டு இந்தியாவிலிருந்து தப்பிச்சென்ற, தன்னைதானே கடவுள் எனவும் இந்து மதத்தின் அதி உயர்மதகுரு அறிவித்துக்கொண்ட,நித்தியானந்தாவே இந்த கற்பனை தேசத்தினை உருவாக்கினார்.

ஈக்குவடோர் பராகுவேயில் நிலங்களை கொள்வனவு செய்வதற்கு மேற்கொண்ட முயற்சிகள்தோல்வியடைந்த பின்னர், அமெரிக்காவின் நியுவார்க் என்ற நகரத்தை கொள்வனவு செய்வதற்கான உடன்படிக்கையில் கைச்சாத்திட்ட பின்னர், ( அதிகாரிகள் கைலாசா என்ற நாடே இல்லை என்பதை அறிந்த பின்னர் கைவிடப்பட்டது)இந்த போலி நாடு பொலிவியாவை நோக்கி தனது கவனத்தை திருப்பியுள்ளது.

செப்டம்பர் – நவம்பர் 2024 ம் ஆண்டுகளிற்கு இடையில் கைலாசாவின் பிரதிநிதிகள் நாலு சுதேசிய மக்கள் சமூகத்தின் பிரதிநிதிகளுடன் உடன்படிக்கையில் கைசாத்திட்டுள்ளனர்.

Advertisement

நிலங்களை ஆயிரம் வருட குத்தகைக்கு எடுப்பது தொடர்பானதே இந்த உடன்படிக்கை.

அனைத்து கைலாசாவிற்கு சாதகமாக நடைபெற்றுக்கொண்டிருந்த ஒரு சூழ்நிலையில் பொலிவியாவின் எல்டெபர் கடந்த மாதம் இந்த மோசடியை அம்பலப்படுத்தியுள்ளது.

நான் முதன் முதலில் இது தொடர்பான ஒப்பந்தங்களை படித்தபோது நான் கற்பனை செய்கின்றேன் என நினைத்தேன் என்கின்றார் இந்த உண்மையை அம்பலப்படுத்திய பத்திரிகையாளர் சில்வானாவிசென்டி.

Advertisement

அவை மிகவும் பகுத்தறிவற்றவையாக மாயாஜால கதைகளை போல காணப்பட்டன என அவர் குறிப்பிடுகின்றார்.

கைலாச தொடர்பான ஒப்பந்தங்களை கார்டியன் பார்வையிட்டுள்ளது.’ இந்த ஆவணங்களின்படி கைலாசா பெருமளவு நிலங்களை தனது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருக்கும் எனவும் கார்டியன் சுட்டிக்காட்டியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன