இலங்கை
இந்தோனேஷியாவில் இரகசிய கடற்கரை

இந்தோனேஷியாவில் இரகசிய கடற்கரை
உலகில் எத்தனையோ விதமான கடற்கரைகள் உள்ளன. அவை ஒவ்வொன்றும் வெவ்வேறு விதமானவை.
அந்த வகையில் இந்தோனேஷியாவின் பாலி மிகவும் பிரபலமான சுற்றுலாத் தளங்களில் ஒன்று.
பாலியில் பாண்டவா எனும் கடற்கரை அமைந்துள்ளது.
இந்தக் கடற்கரைக்கு செல்லும் பாதையே சற்று வித்தியாசமாகத்தான் இருக்கும்.
இந்தக் கடற்கரைக்கு செல்லும் பாதையானது மலையைக் குடைந்து உயரமான நிலப்பரப்புக்கு நடுவில் அமைந்திருக்கும்.
சுமார் 300 மீட்டர் நீளம் கொண்ட இந்த பாதையின் இரண்டு பக்கமும் 40 மீட்டர் உயரம் கொண்ட சுண்ணாம்பு சுவர்கள் உள்ளன.
இந்தப் பாதையின் இரு பக்கமும் உள்ள உயரமான பாறைகளில் ஒரு பாறையின் குன்றின் மேல் பாண்டவர்கள் மற்றும் அவர்களது தாய் குந்தி தேவியின் உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன.
வெள்ளை மணலுடன் கூடிய சுத்தமான இந்தக் கடற்கரை ரகசிய கடற்கரை என்றும் அழைக்கப்படுகிறது.