Connect with us

சினிமா

உதயநிதி எது சொன்னாலும் நம்பாதீங்க!! பிரபல நடிகர் சொன்ன உண்மை தகவல்..

Published

on

Loading

உதயநிதி எது சொன்னாலும் நம்பாதீங்க!! பிரபல நடிகர் சொன்ன உண்மை தகவல்..

தமிழ் சினிமாவில் காமெடி நடிகர், இயக்குநர், வசனகர்த்தா உள்ளிட்ட பன்முகத்திறமைகளை கொண்டு பயணித்து வருபவர் ரமேஷ் கண்ணா. அவரின் பழைய பேட்டி வீடியோ ஒன்று இணையத்தில் தற்போது டிரெண்ட்டாகி வருகிறது.அந்த பேட்டியில், உதயநிதியை நம்பவேகூடாது, அவர் ஒரு பயங்கரமான ஆள். ஆதவன் படத்தில் அவரும் கே எஸ் ரவிக்குமாரும் ஒரு சீனில் நடித்தார்கள். பொதுவாக ரவிக்குமார் படத்தில் நடித்தால் அந்த சீனை நான் தான் இயக்குவேன். அப்படித்தான் அந்த சீனை டைரக்ட் செய்தேன்.அப்போது அந்த சீனை இயக்கும் போது உதயநிதியிடம் சென்று உங்களை முதன்முதலாக இயக்கியது நான் தான். எனவே உங்களை ஹீரோவாக வைத்து ஒரு படம் இயக்கவிருக்கிறேன். நடியுங்கள் என்று சொன்னேன், அதற்கு அவரோ, ஐயையோ நான் நடிகனாகவே மாட்டேன். கே எஸ் ரவிக்குமார் சொன்னதால் தான் இந்த சீனில் நடித்தேன் என்று சொன்னார்.ரவிக்குமாரும் அந்த சமயத்தில் உதயநிதியிடம், நன்றாகத்தான் நடிக்கிறீர்கள் பேசாமல் நீங்கள் நடிகராகிவிடலாமே என்று கூறினார். அந்த மாதிரி எண்ணமெல்லாம் எனக்கு கிடையாது சார் என்று கூறிவிட்டார். ஆனால், பின்னால் நடிகராகிவிட்டார்.பின் அவரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தபோது, என்ன உதயநிதி நடிக்கமாட்டேன் என்று சொல்லிவிட்டு நடித்துவிட்டீர்கள், பின் என்ன அரசியல் தானே என்று கேட்டேன். அதற்கும் அவர் அரசியலுக்கு நான் வருவேனா? அட வேலையை பாருங்க சார் என்று சொன்னார்.இப்போது துணை முதலமைச்சர் ஆகிவிட்டார், எனவே அவர் சொல்வதை நம்பவே கூடாது என்று ரமேஷ் கண்ணா தெரிவித்துள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன