Connect with us

இலங்கை

பாடசாலைகளில் உயர்தர ஆசிரியர்களுக்கு கடும் பற்றாக்குறை!

Published

on

Loading

பாடசாலைகளில் உயர்தர ஆசிரியர்களுக்கு கடும் பற்றாக்குறை!

  இலங்கையின் பல பாடசாலைகளில் க.பொ.த உயர்தர (A/L) ஆசிரியர்களுக்கு கடுமையான பற்றாக்குறை நிலவுவதாக இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.

இது தொடர்பில் அச் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் கூறுகையில்,

Advertisement

இதற்காக ஆசிரியர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கு அரசாங்கத்திடம் எந்தத் திட்டமும் இல்லை என்று குறிப்பிட்டார்.

அரசாங்கம் தொடர்ந்து 30,000 ஆசிரியர் பற்றாக்குறை உள்ளதாகக் கூறி வருகிறது.

ஆனால் இதை நிவர்த்தி செய்ய எந்தத் திட்டமும் இல்லை. இப்போது கொழும்பு உள்ளிட்ட முக்கிய நகரங்களிலுள்ள தேசிய பாடசாலைகளில் உயர்தர ஆசிரியர் பற்றாக்குறை ஒரு பாரிய பிரச்சினையாக உள்ளது.

Advertisement

தற்போதுள்ள ஆசிரியர்களுக்கு தாங்க முடியாத அளவு பணிச்சுமை உள்ளது.

உயர்தர பாடங்களுக்கு அறிவியல், கணிதம் ஆகியவற்றுக்கு ஆங்கில வழி பட்டதாரிகள் தேவை. தகவல் தொழில்நுட்ப (IT) ஆசிரியர்களும் தேவை.

ஆனால் அவர்களை ஆட்சேர்ப்பு செய்ய எந்தத் திட்டமும் இல்லை. இது ஒரு பாரதூரமான நெருக்கடி,” என்று அவர் தெரிவித்தார்.

Advertisement

அதேவேளை பாடசாலைகளில் ஆசிரியர் பற்றாக்குறை காரணங்களால் ஒழுங்கற்ற மேலதிக வகுப்புகளின் துறை ஊக்குவிக்கப்படுவதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் மனிதவியல் மற்றும் சமூக அறிவியல் பட்டப்பின்படிப்பு நிறுவனத்தின் பணிப்பாளரும், பொருளாதார விரிவுரையாளருமான பேராசிரியர் வசந்த அத்துகோரல தெரிவித்துள்ளார்.

கல்வி முறைமையில் உள்ள பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு இம்முறை வரவு செலவுத் திட்டம் மூலம் நேர்மறையான பதில் எதுவும் கிடைக்கவில்லை என்றும் , மேலதிக வகுப்புத் துறையில் ஆண்டு முழுவதும் 200 பில்லியன் ரூபாவுக்கு மேல் பணம் புழக்கத்தில் உள்ளதாகவும் பேராசிரியர் வசந்த அத்துகோரல விளக்கினார்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன