இலங்கை
பிள்ளையான் கைது!

பிள்ளையான் கைது!
முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரான அவர் மட்டக்களப்பில் உள்ள கட்சியின் தலைமைக் காரியாலயத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார். கொழும்பிலிருந்து சென்ற குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் இந்தக் கைது நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.
ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புடைய குற்றச்சாட்டுக்களுக்காக பிள்ளையான் அண்மைக்காலமாக தொடர் விசாரணைகளை எதிர்கொண்டு வந்தார்.
எதிர்வரும் 21ஆம் திகதிக்கு முன்னர், ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புடைய பிரதான குற்றவாளியொருவர் கைது செய்யப்படுவார் என்று ஜனாதிபதி அநுரவும் கூறியிருந்தார்.
ஆதலால், ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புடைய குற்றச்சாட்டுக்காக அவர் கைது செய்யப்பட்டுள்ளாரா? என்பது தொடர்பில் பலத்த சந்தேகங்கள் எழுந்துள்ளன. எனினும், பத்திரிகை அச்சுக்குப் போகும் வரை கைதுக்கான காரணம் தொடர்பில் தகவல் வெளியாகவில்லை.