தொழில்நுட்பம்
ரூ.10,000 பட்ஜெட்டில் கிடைக்கும் 6 சிறந்த 5ஜி ஸ்மார்ட்போன்கள் – என்னென்ன?

ரூ.10,000 பட்ஜெட்டில் கிடைக்கும் 6 சிறந்த 5ஜி ஸ்மார்ட்போன்கள் – என்னென்ன?
1. POCO M6 5G [ரூ.8,499]புதிதாக அறிமுகம் செய்யப்பட்டு விற்பனைக்கு கொண்டுவரப்பட்ட பட்ஜெட் செக்மென்ட் 5ஜி போன் POCO M6 5G, ஆண்ட்ராய்டு 13 அடிப்படையிலான MIUI 14 -ல் இந்த மொபைல் இயங்குகிறது. 90Hz ரெஃப்ரஷ் ரேட்டுடன் 6.74 இன்ச்-HD+ டிஸ்ப்ளே, 50MP பிரைமரி கேமரா 5MP செல்ஃபி கேமிரா, 18W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட்டுடன் கூடிய 5000mAh பேட்டரி பேக் இந்த மொபைலில் கொடுக்கப்பட்டுள்ளது.2. Redmi A4 5G [ரூ.8,913]ரூ. 8,499 க்கு அறிமுகம் செய்யப்பட்டு உள்ள ரெட்மி ஏ4 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் 6.88 இன்ச்-HD+ டிஸ்பிளே, ஸ்னாப் டிராகன் 4எஸ் ஜென் 2 சிப்செட், 50 மெகாபிக்சல் ரியர் கேமரா, 5160mAh பேட்டரி, ஷாவ்மீ நிறுவனத்தின் ஹைப்பர்ஓஎஸ் ஸ்கின் உடனான ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் போன்ற முக்கிய அம்சங்களை கொண்டுள்ளது.3. Realme c65 [ரூ.10,199]6.67 இன்ச் ஹெச்டி+ டிஸ்பிளே, மீடியாடெக் டிமான்சிட்டி 6300 சிப்செட், ஆண்ட்ராய்டு 14 இயங்குதளம், 2 ஆண்டுகளுக்கு இயங்குதள அப்டேட் உறுதி செய்யப்பட்டுள்ளது. 50 மெகாபிக்சல் கேமரா, 8 மெகாபிக்சல் முன்பக்க கேமரா, 5,000mAh பேட்டரி, 15 வாட்ஸ் சார்ஜிங் சப்போர்ட், 5ஜி நெட்வொர்க், 4ஜிபி / 6ஜிபி ரேம், 64ஜிபி / 128ஜிபி ஸ்டோரேஜ். இந்த போனின் விலை ரூ.10,199 முதல் தொடங்குகிறது4. Moto G45 5G [ரூ.10,999]மோட்டோ ஜி45 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது ஸ்னாப்டிராகன் 6எஸ் ஜென் 3 (Snapdragon 6s Gen 3) சிப்செட், 6.5-இன்ச் 120ஹெர்ட்ஸ் டிஸ்பிளே, 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் கொரில்லா கிளாஸ் 3 ப்ரொடெக்ஷன் உடனான ஒரு அற்புதமான டிஸ்பிளே அனுபவத்தை வழங்கும். டால்பி அட்மோஸ் மற்றும் ஹை-ரெஸ் ஆடியோவையும் கொண்டுள்ளது. 5,000mAh பேட்டரி, 20 வாட்ஸ் சார்ஜிங் சப்போர்ட் வசதி கொண்டுள்ளது.5. POCO M6 Plus 5G [ரூ.10,999]போக்கோ எம்6 பிளஸ் 5ஜி போன் 108 எம்பி மெயின் கேமரா (Samsung ISOCELL HM6) + 2எம்பி மேக்ரோ கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. 6.79-இன்ச் ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) எல்சிடி (LCD) டிஸ்பிளே, 120Hz ரெஃப்ரெஷ் ரேட் , கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 (Corning Gorilla Glass 3),550 நிட்ஸ்பீக் பிரைட்னஸ் அம்சங்கள் உள்ளன.ஸ்னாப்டிராகன் 4 ஜென் 2 ஏஈ 4என்எம் (Octa Core Snapdragon 4 Gen 2 AE 4nm) சிப்செட், ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) மூலம் போக்கோ எம்6 பிளஸ் 5ஜி போன் இயங்குகிறது. 5030mAh பேட்டரி உடன் சார்ஜ் செய்ய 33W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது.6. IQOO Z9X 5G [ரூ.11,615]இந்திய சந்தையில் ரூ.11,600 பட்ஜெட் செக்மென்டில் இந்த ஐக்யூ இசட்9எக்ஸ் 5ஜி போனில், 50 எம்பி மெயின் கேமரா, 120Hz ரெஃப்ரெஷ் ரேட் டிஸ்பிளே, 44W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 6000mAh பேட்டரி, ஸ்னாப்டிராகன் 6 ஜென் 1 4என்எம் (Octa Core Snapdragon 6 Gen 1 4nm) சிப்செட் மற்றும் அட்ரினோ 710 ஜிபியு (Adreno 710 GPU) கிராபிக்ஸ் கார்டுடன் கிடைக்கிறது. ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) குறிப்பிடத்தக்கது. ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷனும், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் உள்ளது.