சினிமா
ரெடியா..? குட் பேட் அக்லி Vibe-ல் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்..

ரெடியா..? குட் பேட் அக்லி Vibe-ல் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்..
முன்னனி இயக்குநர் ஆதிக் ரவி இயக்கத்தில் தல அஜித் நடித்து வரும் “good bad ugly ” திரைப்படம் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கபட்டு வருகின்றது. இந்த படத்தினை மைத்திரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்து வருவதுடன் அஜித்துடன் இணைந்து திரிஷா ,பிரபு ,ஜோகிபாபு ,பிரசன்னா ,அர்ஜுன் தாஸ் ஆகியோர் நடித்துள்ளனர். மேலும் இந்த படத்தில் கொடூர வில்லனாக அர்ஜுன்தாஸ் நடித்துள்ளார்.இப் படத்திற்கு ஜி வி பிரகாஷ்குமார் இசையமைத்துடன் சமீபத்தில் வெளியாகிய இரண்டாவது சிங்கிள் அஜித் ரசிகர்களால் வரவேற்கும் அளவிற்கு அமைந்திருந்தது. மேலும் இந்த படம் “விடாமுயற்சி ” படத்தை போல் இல்லாமல் ரசிகர்களால் ஒரு பெரிய எதிர்பார்ப்பிற்கு மத்தியில் வெளியாகவுள்ளது.இந்த நிலையில் தற்போது ஜிவி தனது டுவிட்டர் பக்கத்தில் அப்டேட் ஒன்றினை வெளியிட்டுள்ளார். மேலும் படம் நாளை வெளியாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.