இலங்கை
ஆப்பிள் சாப்பிட்ட பிறகு மறந்தும் கூட இதை சாப்பிடாதீர்கள்

ஆப்பிள் சாப்பிட்ட பிறகு மறந்தும் கூட இதை சாப்பிடாதீர்கள்
இயற்கை உணவுகளே உடல் ஆரோக்கியத்தில் அதிக நன்மைகளை தரும். ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பழங்களில் ஒன்று ஆப்பிள். இத்தகைய, ஆப்பிள்களை தவறாக சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் என உங்களுக்கு தெரியுமா?
ஆப்பிள்களை தவறாக சாப்பிடுவதால் எவ்வாறான ஆரோக்கியத்திற்கு தீங்கு ஏற்படும் என நாம் இங்கு பார்ப்போம்.
அனைத்து விதமான பழங்களுமே நன்மை பயக்கும் என்றாலும், குறிப்பிட்ட சில பழங்களை உண்பதால் சிலருக்கு அழற்சி பிரச்சனைகளும் ஏற்படலாம். நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கென்று சில கட்டுப்பாடுகளும் உள்ளன.
ஆப்பிள் சாப்பிடும் போது சில விஷயங்களை மனதில் கொள்ள வேண்டும். அந்த வகையில், காலையில் வெறும் வயிற்றில் ஆப்பிள் சாப்பிடக்கூடாது மற்றும் மாலையில் ஆப்பிள் சாப்பிடுவது ஆரோக்கியத்தில் மோசமான விளைவை ஏற்படுத்தக்கூடும், இதனால் சளி அல்லது இருமலும் ஏற்படலாம்.
அடுத்ததாக, ஆப்பிள் சாப்பிட்ட அரை மணி நேரத்திற்குப் பிறகுதான் தண்ணீர் குடிக்க வேண்டும். எனவே, ஆப்பிள் சாப்பிடுவதற்கு முன்பாக தண்ணீர் குடிப்பது நல்லது. மேலும், ஒவ்வொரு நாளும் 1 அல்லது 2 ஆப்பிள்களை சாப்பிடலாம். காலை உணவுக்குப் பிறகு ஒரு ஆப்பிள் சாப்பிடலாம்.
ஆப்பிள் சாப்பிட்ட அரை மணி நேர இடைவெளிக்கு பிறகு தான் டீ குடிக்க வேண்டும்.
ஆப்பிள் சாப்பிட்ட பிறகு முள்ளங்கி மற்றும் ஊறுகாய் சாப்பிடுவதையும் தவிர்க்கவும். இது உடலுக்கு நன்மையை விட தீங்கையே விளைவிக்கும்.
ஆப்பிளை சூடான பாலுடன் சாப்பிடக்கூடாது.