சினிமா
சீரியல்களுக்கு டாடா பாய் பாய் கூறியது ஏன்… காவ்யா ஓபன் டாக்

சீரியல்களுக்கு டாடா பாய் பாய் கூறியது ஏன்… காவ்யா ஓபன் டாக்
விஜய் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகும் தொடர்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ்.இந்த தொடரின் முதல் பாகத்தில் சித்ரா இறப்பிற்கு பிறகு முல்லையாக நடித்து வந்தவர் காவ்யா அறிவுமணி. இந்த தொடருக்கு முன் பாரதி கண்ணம்மா சீரியலில் நடித்துக் கொண்டிருந்தார்.முல்லையாக நடித்து ரசிகர்களை கவர்ந்த இவர் திடீரென தொடரில் இருந்தும் விலகினார். சீரியல்களுக்கு டாடா பாய் பாய் சொன்னது ஏன் என ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.அதில் அவர், சீரியல்களில் நடித்துக் கொண்டிருக்கும் போது பட வாய்ப்புகள் வந்தது, இரண்டிலும் நடிக்க முடியவில்லை.படங்கள் நடிக்க வேண்டும் என்றால் சீரியல்களை விட வேண்டும் என தெரிந்ததால் அதில் நடிப்பதை நிறுத்தினேன் என கூறியுள்ளார்.