Connect with us

சினிமா

“படையப்பா”படத்தைப் பார்த்து ரியாக்சன் கொடுக்காத ரஜினி!மனவருத்தத்தைப் பகிர்ந்த ரவிக்குமார்

Published

on

Loading

“படையப்பா”படத்தைப் பார்த்து ரியாக்சன் கொடுக்காத ரஜினி!மனவருத்தத்தைப் பகிர்ந்த ரவிக்குமார்

தமிழ் சினிமா வரலாற்றில் ஓர் அழியாத இடத்தைப் பிடித்த திரைப்படம் “படையப்பா”. இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கூட்டணியில் உருவான இந்த படத்தில், சிவாஜி கணேசன், ரம்யா கிருஷ்ணன், செளந்தர்யா என மாபெரும் நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். படம் வெளியாகி 25 ஆண்டுகள் கடந்தாலும், ‘படையப்பா’ திரைப்படம் ரசிகர்களின் மனதில் இன்றும் நிலைத்து நிற்கின்றது.’படையப்பா’ படத்தின் வெற்றிக்குப் பின்னால் பல காரணங்கள் காணப்படுகின்றன. இந்த வெற்றியின் பின்னணி குறித்து சமீபத்தில் இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார் அரிய தகவல்களைப்  பகிர்ந்துள்ளார். அதன்போது ரவிக்குமார் கூறியதாவது, “படையப்பா படம் முழுமையாக தயாரான பிறகு, நான் ரஜினி சாரை படம் பார்க்க அழைத்தேன். அவருடன் நெருங்கிய நண்பர்களும் வந்திருந்தார்கள். எல்லோரும் படம் முழுவதும் பார்த்தார்கள். படம் முடிந்ததும், இரவு உணவுக்குப் போவோம் என்று ரஜினி சார் சொன்னார். அதற்காக நாம் அருணாச்சலம் கெஸ்ட் ஹவுஸ் பக்கம் கிளம்பினோம்.” என்றார்.மேலும், “படம் முடிந்த பிறகு, ரஜினி சார் எதுவும் பேசாமல் கிளம்பி விட்டார். அவர் எந்த கருத்தும் தெரிவிக்காமல் சென்று விட்டது எனக்கு மிகுந்த குழப்பத்தை ஏற்படுத்தியது. ‘ரஜினி சாருக்கு படம் பிடிக்கவில்லையோ?’ என்ற எண்ணம் மனதில் எழுந்தது. அந்த இரவு எனக்கு மிகவும் பாரமாகவே கழிந்தது,” என்று ரவிக்குமார் தெரிவித்திருந்தார்.எனினும் மறுநாள் ரஜினி சார் எனக்கு போன் எடுத்து சிரித்தபடியே கூறினார். ‘ரவி, படம் நன்றாக இருந்தது. என்னோட நண்பர்கள் எதையும் நேர்மையாக சொல்ல மாட்டார்கள். அதனால் தான் கெஸ்ட் ஹவுஸ் போய் பேசாமல் புறப்பட்டு விட்டேன்.’ என்று கூறினார். அந்த வார்த்தைகள் என் நெஞ்சை மகிழ்வித்தன” என்றார்.’படையப்பா’ திரைப்படம் ஒவ்வொரு முறையும் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் போது ரசிகர்களின் உற்சாகம் குறைந்ததே இல்லை. TRP ரேட்டிங்கில் கூட அதிகமான வரவேற்பினைப் பெற்று வருகின்றது. அதேபோல், சமூக வலைத்தளங்களில் இன்றும் ‘படையப்பா’ படத்தின் டயலாக் வீடியோக்கள் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன