வணிகம்
Gold Rate Today: தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2,160 உயர்வு… இல்லத்தரசிகள் ஷாக்!

Gold Rate Today: தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2,160 உயர்வு… இல்லத்தரசிகள் ஷாக்!
இந்தியாவில் தங்கம் விலை ஒருநாள் உயருவதும், மறுநாள் கொஞ்சம் குறைவதுமாக ஆட்டம் காட்டி வருகிறது. அவ்வப்போது சற்று சரிந்து வந்த தங்கம் விலை தற்போது தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருக்கிறதுதங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் நகைப்பிரியர்கள் தங்க நகைகள் வாங்குவதில் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். இந்த விலை உயர்வு நடுத்தர வர்க்கத்தினரை கடுமையாக பாதித்துள்ளது.இந்தநிலையில், இன்று மீண்டும் தங்கம் விலை உயர்ந்தது. மேலும் இதுவரையில் இல்லாத வகையில் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. ஒரே நாளில் ரூ. 2160 எறியுள்ளதுசென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.2160 உயர்ந்து ரூ.68,480-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.270 உயர்ந்து ரூ.8,560-க்கு விற்பனை செய்யப்படுகிறதுஇதேபோல் வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ. 104-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ. 1,04,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.