சினிமா
விவாகரத்து கேட்ட ரவி மோகன்!! முடிவில் ஸ்ட்ராங்காக இருக்கும் மனைவி ஆர்த்தி..

விவாகரத்து கேட்ட ரவி மோகன்!! முடிவில் ஸ்ட்ராங்காக இருக்கும் மனைவி ஆர்த்தி..
மோகன் ரவிதமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் ஜெயம் ரவி, கராத்தே பாபு, பராசக்தி, ஜெனி போன்ற படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இதற்கிடையில் தன்னுடைய பெயரை மோகன் ரவி என்று இனிமேல் கூப்பிடவேண்டும் என்று ஒரு அறிக்கையை வெளியிட்டார்.அதேநேரம் கடந்த ஆண்டு 2024 செப்டம்பர் மாதம் தன்னுடைய மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்யப்போவதாக அறிக்கை வெளியிட்டார். 15 வருட திருமண வாழ்க்கையை முறித்துக் கொள்ள என்ன காரணம் என்று பலர் பல தகவலை கூறி வந்தனர்.இந்த விஷயத்தில் எனக்கு விவாகரத்துக்கு விருப்பம் இல்லை என்றும் தன் குழந்தைகளுக்கு இதுபற்றி ஏதும் தெரியாது, அவரிடம் பேச வேண்டும் என்று ஆர்த்தி தெரிவித்திருந்தார். இதைதொடர்ந்து ரவி மற்றும் ஆர்த்தி நீதிமன்றத்தில் ஆஜராகிய நிலையில் சமரச பேச்சு வார்த்தை நடைபெற்றது.இந்த விவகாரம் சார்ப்பாக இன்னும் விவாகரத்து இருவருக்கும் நீதிமன்றம் அளிக்கவில்லை. இந்நிலையில் தன்னுடைய முடிவில் ஆர்த்தி ரவி எந்தமாற்றத்திலும் இல்லாமல் ரவி மோகனுடம் வாழவே விருப்படுகிறார் என்று கூறப்படுகிறது. மேலும் ஆர்த்தி ரவி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மேரீட் டூ ஜெயம்ரவி என்று வைத்ஹ்டிருப்பதை டெலீட் செய்யாமல் இருந்து வருகிறார்.