சினிமா
Good Bad Ugly குறித்து நடிகை சிம்ரன் உருக்கமான பதிவு..!

Good Bad Ugly குறித்து நடிகை சிம்ரன் உருக்கமான பதிவு..!
பிரபல இயக்குநர் ஆதிக் ரவி இயக்கத்தில் தல அஜித் நடித்து வரும் “good bad ugly ” திரைப்படம் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கபட்டு வருகின்றது. இந்த படத்தினை மைத்திரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்து வருவதுடன் அஜித்துடன் இணைந்து திரிஷா ,பிரபு ,ஜோகிபாபு ,பிரசன்னா ,அர்ஜுன் தாஸ் ஆகியோர் நடித்துள்ளனர். மேலும் இந்த படத்தில் கொடூர வில்லனாக அர்ஜுன்தாஸ் நடித்துள்ளார்.இந்த படம் நேற்று வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்று வருகின்றது. வெளியாகி முதல் நாளே 65 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளது. இந்த படத்தில் அர்ஜுன் தாஸின் நடிப்பு அதிகம் பேசப்பட்டு வருகின்றது. கேமியோ ரோலில் நடித்த சிம்ரன் மிகவும் சிறப்பாக நடித்து பழைய நினைவுகளை மீட்டியுள்ளார்.இந்த நிலையில் தற்போது இப் படத்தில் நடித்தது குறித்து பெருமையான பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார்.”ஒரு சிறப்புத் தோற்றத்தில் வந்தேன், உங்கள் அனைவரின் அன்புடனும் வெளியேறினேன் Good Bad Ugly படத்தில் அஜித் சாருடன் மீண்டும் இணைவது மிகவும் அருமையாக இருந்தது நன்றி. அதிக்ரவி உங்களது வேடிக்கையான தயாரிப்புக்கு ” என கூறியுள்ளார்.