பொழுதுபோக்கு
‘தித்திக்குதே’ திரைப்பட நாயகி ஸ்ரீதேவியின் வசீகரிக்கும் வைரல் புகைப்படங்கள்

‘தித்திக்குதே’ திரைப்பட நாயகி ஸ்ரீதேவியின் வசீகரிக்கும் வைரல் புகைப்படங்கள்
90ஸ் கிட்ஸ்களின் அபிமான கதாநாயகிகளில் முதன்மையான இடத்தில் இருப்பவர் ஸ்ரீதேவி விஜயகுமார். மிகக் குறைந்த அளவிலான திரைப்படங்களில் நடித்திருந்தாலும், ரசிகர்களை தனது திறமையால் கவர்ந்தவர்.தமிழ் சினிமாவின் பழம்பெரும் நடிகர் விஜயகுமாரின் மகளாக அறியப்படும் ஸ்ரீதேவி, குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் தனது பயணத்தை தொடங்கினார். குறிப்பாக, ‘ரிக்ஷா மாமா’, ‘அம்மா வந்தாச்சி, ‘டேவிட் அங்கிள்’ போன்ற திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக இவர் நடித்துள்ளார்.தமிழ் சினிமாவில் தனது திரைப் பயணத்தை தொடங்கி இருந்தாலும், தெலுங்கு மற்றும் கன்னடம் போன்ற தென்னிந்திய மொழி திரைப்படங்களிலும் ஸ்ரீதேவி விஜயகுமார் நடித்துள்ளார்.தமிழில் ‘காதல் வைரஸ்’ என்ற திரைப்படத்தில் கடந்த 2002-ஆம் ஆண்டு அறிமுகமான ஸ்ரீதேவி விஜயகுமாருக்கு, ‘தித்திக்குதே’, ‘பிரியமான தோழி’ மற்றும் ‘தேவதையை கண்டேன்’ போன்ற திரைப்படங்கள் நற்பெயரை பெற்றுத் தந்தன.இதையடுத்து ராகுல் என்பவரை திருமணம் செய்து கொண்ட ஸ்ரீதேவி விஜயகுமார், சினிமா மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் இருந்து சற்று இடைவெளி எடுத்துக் கொண்டார்.இந்நிலையில், சின்னத்திரை நிகழ்ச்சி மூலமாக நடிகை ஸ்ரீதேவி விஜயகுமார் ரீஎன்ட்ரி கொடுத்துள்ளார். அதன்படி, தெலுங்கு மற்றும் தமிழில் ஒளிபரப்பாகும் நடன நிகழ்ச்சிகளில் ஸ்ரீதேவி நடுவராக உள்ளார்.